பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 40 பேர் விடுதியில் தங்க வைப்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 40 பேர், விருத்தாசலம் அரசு கல்லுாரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் விமானம், ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள், சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்தனர். மத்திய அரசு முயற்சியால், சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், சிறப்பு ரயில்கள் மூலம் வெளிமாநில நபர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன்படி, துபாய், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 40 பேர், சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்கள், சென்னையில் இருந்து விருத்தாசலம் அழைத்து வரப்பட்டு, கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி மாணவிகள் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும், பாதிப்பு இல்லாத நபர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X