அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., நாடகம் ஒருபோதும் மக்களிடம் எடுபடாது ; அமைச்சர் தங்கமணி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சென்னை : 'தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தை இருளில் ஆழ்த்தி விட்டு, தற்போது மின்சாரத்திற்கு சலுகை என, கூப்பாடு போடுவது, மக்களை திசை திருப்பும் நாடகம். அது, ஒருபோதும் மக்களிடம் எடுபடாது' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியின் மெத்தனத்தால் நிலவிய, கடுமையான மின் வெட்டின் காரணமாக, தமிழகம் இருளில் மூழ்கி இருந்ததை மறந்து விட்டு, ஸ்டாலின், சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே செய்து வருகிறார்.ஸ்டாலின், அவர்கள் ஆட்சி காலத்தில், தமிழகத்தை இருளில் ஆழ்த்திவிட்டு, அரைகுறை மின்சாரத்திற்கு, எந்தவித சலுகையும் அளிக்காமல், தற்போது கூப்பாடு போடுவது, மக்களை திசை திருப்பும் நாடகம் மட்டுமே. அது, ஒருபோதும், தமிழக மக்களிடம் எடுபடாது.

நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட மின் கட்டணகணக்கீட்டு முறையை, ஸ்டாலின் குளறுபடி என்கிறார். ஆனால், தி.மு.க.,- - எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, 'நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை' என்கிறார். இப்படி முரண்பட்ட கருத்துகள், தி.மு.க., செய்யும் முரண்பாடான அரசியலை தெளிவாக காட்டுகின்றன. இவ்வாறு, தங்கமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X