தயங்கும் புதிய எம்.பி.,க்கள்; நாளை பதவியேற்பது சந்தேகம்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
டில்லியில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையிலும், தென் மாநிலங்களிலிருந்து தேர்வாகியுள்ள, ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலர், நாளை(ஜூலை 22) நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருவரா என்ற சந்தேகம் நிலவுகிறது.ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் முதலே, எம்.பி.,க்கள் தேர்வாகி வந்தபோதிலும்,
Rajya Sabha, MPs, oath, Newly elected, sworn, oath ceremony, House chamber

டில்லியில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையிலும், தென் மாநிலங்களிலிருந்து தேர்வாகியுள்ள, ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலர், நாளை(ஜூலை 22) நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருவரா என்ற சந்தேகம் நிலவுகிறது.

ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் முதலே, எம்.பி.,க்கள் தேர்வாகி வந்தபோதிலும், கொரோனா பரவல் காரணமாக, பதவியேற்பு நிகழ்ச்சி, தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்நிலையில், இனியும் தாமதம் வேண்டாமென, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு முடிவெடுத்ததை அடுத்து, நாளை புதிய, எம்.பி.,க்களின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பார்லி., வளாகம் முழுதும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய எம்.பி.,க்கள் அனைவரும், டில்லிக்கு வருவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், டில்லியில், கொரோனா தொற்றின் தீவிரம் குறையாமல் இருப்பது தான்.

இங்கே, மாநில அரசுகளின் பவன்கள் முழுமையாக செயல்பட வில்லை. புதிய தமிழ்நாடு இல்லம், இன்னும் திறக்கப்படவில்லை. பழைய இல்லம் பாதியளவு இயங்குகிறது. உணவகம் மூடப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலருக்காக மட்டும் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இது தெரிந்து, தென் மாநிலங்களில் இருந்து தேர்வாகியுள்ள, எம்.பி.,க்களில் பலரும், பதவியேற்க வர தயங்குகின்றனர். அரசியலமைப்பு விதிகளின்படி, செப்டம்பர், 23க்குள் பார்லிமென்ட் கூடப்போகிறது.

அப்போது, முதல் நாளில், சபைக்குள்ளேயே பதவியேற்க வாய்ப்பிருக்கையில், இப்போது எதற்கு தேவையில்லாமல் என, வேறு சில, எம்.பி.,க்கள் கருதுகின்றனர். இந்த காரணங்களால், நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய எம்.பி.,க்கள் அனைவரும் பதவியேற்பது சந்தேகமே. இவர்களில் கணிசமானோர், கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியேற்றுக் கொள்வதற்கே, அதிக வாய்ப்பு இருப்பதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
21-ஜூலை-202013:51:38 IST Report Abuse
sankaseshan இதற்கு முன் உதாரணம் உன்னுடைய பப்பு .
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-ஜூலை-202009:26:24 IST Report Abuse
Chandramoulli வெளிநடப்பு செய்பவர்களுக்கு எதற்கு பதவி ஏற்க வேண்டும். ஒரு சிறிய அறிக்கை விடுங்கள். பதவி ஏற்ற பிறகு தான் சுகங்கள் அனுபவிக்க மற்றும் இதர செலவுகள் அரசு ஏற்கும் . எப்படி ஓடி வருகிறார்கள் என்று பாருங்கள்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜூலை-202008:42:55 IST Report Abuse
Lion Drsekar ஆன் லயனில் பதவி ஏற்றுக்கொண்டாலும் லட்சக்கணக்கில் சம்பளம், வாழ்நாளின் பென்சன் வேறு என்ன வேண்டும் இந்த திருநாட்டில், இதற்க்கு முன்பு நேரில் பதவி ஏற்றுக்கொண்டவர்கள் ( விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், ) அவர்கள் காலத்தில் ஐந்து ஆண்டுகளில் ஒரு சில நாட்கள் மட்டுமே வந்திருக்கிறார்கள் என்பது பாராட்டப்படவேண்டும், அப்படி இருக்க இவர்கள். வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X