வெள்ளத்தால் பலி உயர்வை தடுக்க சீனாவில் தகர்க்கப்பட்ட அணை

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பீஜிங் : சீனாவில், மழை கொட்டி, ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆற்றின் குறுக்கே இருந்த அணையில் நீர்மட்டத்தை குறைக்க, அது வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

அண்டை நாடான சீனாவின் பல்வேறு பகுதிகளிலும், பலத்த மழையால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, 150க்கும் மேற்பட்டோர் இறந்துஉள்ளனர்.ஆசியாவின் மிக நீளமான யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளிலும், வழக்கத்திற்கு மாறாக, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், கற்கள், மணல் மூட்டைகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகள் மூலம் சீரமைக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய சீனாவில், அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சுஹே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை, முழுமையாக நிரம்பியதால், அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அணைக்கும், நீர்வரத்து அதிகமாக இருந்தது.

வெள்ளத்தால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க, அதிகாரிகள் வெடிபொருட்களை பயன்படுத்தி, அணையை தகர்த்தனர். சீனாவின் மிகப்பெரிய போயாங் நன்னீர் ஏரியில், 620 அடி நீளத்திற்கு ஏற்பட்ட உடைப்பால், ஜியாங்சி மாகாணத்தில், 15 கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள், தண்ணீரில் மூழ்கின. அங்கு வசித்த, 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரம், யாங்சேயில் உள்ள கோர்ஜஸ் அணையின் நீர்மட்டம், வழக்கமான அளவை விட, 50 அடி வரை உயர்ந்தது.

இதனால், அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக, தண்ணீர் திறக்கப்பட்டது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து, இதுவரை, 18 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சேதத்தின் மதிப்பு, 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, அந்நாட்டின் அவசர கால மேலாண்மை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
21-ஜூலை-202011:00:24 IST Report Abuse
RajanRajan பயத்தின் உச்சத்தில் சீனா... வரலாறு காணாத மழை. இதன் காரணமாக The Gorges Dam முழுமையாக நிரம்பிவிட்டது. நேற்று அந்த அணை இருந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதில்... அணையின் அஸ்திவாரங்கள் முற்றிலுமாக ஸ்திரமற்று போய்விட்டன. அணையில் இருந்து வெளியேற்றும் உட்சபட்ச நீரின் அளவை விட, அணைக்கு வரும் நீரின் அளவு 100 மடங்கு அதிகமாக இருக்கிறது. உலகின் முன்றாவது மிகப்பெரிய ஆற்றின் நடுவே இந்த அணை கட்டப்பட்டுள்ளது, உலகின் மிகப்பெரிய அணையும் இதுவே ஆகும். சொல்லப்போனால் ஒட்டுமொத்த சென்னையின் நிலப்பரப்பை விட பல மடங்கு பெரியது இந்த அணை. இந்த அணை இப்போது பெய்யும் வரலாறு காணாத மழை மற்றும் நிலநடுக்கம் காரணமாக என்நேரமும் உடையலாம் என்பது திட்டவட்டமாக தெரிந்துவிட்டது. ஒரு வேளை இந்த அணை உடைந்தால்.... 4 முதல் 50 கோடி பேர் ஜலசமாதி ஆவார்கள் என்பது மட்டும் உறுதி. வூஹான் மாகாணத்தை விட்டு அணைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தது சீனா. எந்நேரம் வேண்டுமானாலும் The Gorges Dam உடையலாம் என்பதால். முதல் கட்டமாக 10 கோடி பேரை இடம் மாற்றுகிறது சீனா. குறைந்த பட்சம் 5 கோடி இறப்பார்கள் என்பாதால், 20 கோடி பேரை பாதுகாப்பான மாநிலங்களுக்கு உடனடியாக பயணப்படுமாறு அறிவுறுத்தல். 'இந்த அணையை கட்டாதே' என அன்று உலகமே கெஞ்சியது. இன்று... அவன் அழிவை அவனே தேடிக்கொண்டான். நொடிக்கு 36000 Cubic Meter நீரை திறந்து விட்டும். அணையின் நீர்மட்டம் குறைந்தபாடில்லை. எவ்வளவு நீரை திறந்தாலும், திறந்து விடும் நீரின் அளவை விட அணைக்கு 100 மடங்கு நீர்வரத்து இருப்பதால். அணையை காப்பாற்றுவது சந்தேகமே. கடைசி 1 மணி நேரத்தில் . 163Mtr இருந்து 23.Cmr. உயர்ந்து 163.23.Mtr ஆக உள்ளது. அடுத்த 24. மணி நேரத்தில் Three Gorges அணை தனது முழுக்கொள்ளலவான 175.MTR அதாவது 600அடி உயரத்தை அடைந்து அணை நிரம்பி வழியும். பிறகு... பாரம் தாங்கமல் அணை உடையலாம். தற்போது சீனாவுக்கு உள்ள ஒரே தீர்வு மழை நிற்க வேண்டும். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்யும் என உலக வானிலை மையம் அறிவித்து விட்டது. ஆதலால் உலகின் மிகப்பெரிய அணை உடைவது உறுதியானது. 'இயற்கை' என்ற இறைவனை மனிதன் விஞ்சினால்... இறைவன் தான் இறுதி தீர்ப்பு வழங்குவார்🙏🏻 எது நடந்தாலும் அது இறைசெயல் தான்... போற்றி போற்றி இறைவா போற்றி🙏🏻
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X