தமிழ்நாடு

ரூ.61 கோடி: நடப்பு பருவத்தில் விளை பொருட்கள் கொள்முதல்...கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் தகவல்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நடப்பாண்டு சாகுபடி பருவத்தில் எள், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் என 61.04 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன.எள், உளுந்து, மக்காச்சோளம் போன்ற உயர் விளைச்சல் பயிர்கள் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், ஆகிய மார்க்கெட் கமிட்டிகளில் மட்டுமே அதிகளவு வரத்து உள்ளது.மேலும் கமிட்டியில் விழுப்புரம், கடலுார், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்த பயிர்களின் தரத்திற்கேற்றவாறு விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான அறுவடை பருவத்தில், 17 ஆயிரத்து 199 விவசாயிகள் கொண்டு வந்த 2,856 டன் எள் 27 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. தொடர்ச்சி ௪ம் பக்கம்13 ஆயிரத்து 149 விவசாயிகள் கொண்டு வந்த 3,828 டன் உளுந்து 24 கோடியே 51 லட்சத்திற்கும்; 2,951 விவசாயிகள் கொண்டு வந்த 4,312 டன் மக்காச்சோளம் 7 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கும்; 604 விவசாயிகள் கொண்டு வந்த 122 டன் வேர்க்கடலை 87 லட்சம் ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.948 விவசாயிகள் கொண்டு வந்த 1,558 டன் கம்பு, 39.38 லட்சம் ரூபாய்க்கும்; 272 விவசாயிகள் கொண்டு வந்த 1922 டன் வரகு, 35.9 லட்சத்திற்கும்; 133 விவசாயிகள் கொண்டு வந்த 4,507 டன் சிவப்பு சோளம் 17.8 லட்சம் ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.இவைகளுடன், 23 டன் பச்சைப்பயறு, 12 டன் ராகி, 5 டன் சூரியகாந்தி, 2 டன் திணை, 11 டன் கொள்ளு, 23 டன் தட்டைப்பயறு, 4 டன் துவரை, 11 டன் ஆமணக்கு, 990 கிலோ பனிப்பயிர், 902 கிலோ மொச்சை, 873 கிலோ சாமை, 117 கிலோ கொத்தமல்லி, 36 கிலோ சோயா பீன்ஸ், 20 கிலோ தேங்காய் உள்ளிட்ட பயிர்கள் சேர்த்து மொத்தம் 36 ஆயிரத்து 969 விவசாயிகள் கொண்டு வந்த 11 ஆயிரத்து 607 டன் விவசாய விளைபொருட்கள் 61 கோடியே 4 லட்சத்து 30 ஆயிரத்து 907 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.

இந்த அறுவடை பருவ காலம் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்கும். அதனையடுத்த 4 மாத இடைவெளிக்குப் பின் ஜனவரி முதல் உளுந்து பயிர் வரத்து துவங்கும். மார்ச் முதல் எள் வரத்து அதிகரிக்கும் எனவும் அதற்கிடையே மக்காச்சோள பயிர் விளைச்சலும் அதிகரித்து வரத்து துவங்கிவிடும் என மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய கொள்முதல் நிலவரம்தற்போது அறுவடைப் பருவம் முடிய உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

அதன்படி நேற்று 180 மூட்டை எள், 55 மூட்டை மக்காச்சோளம், 50 மூட்டை வரகு, 15 மூட்டை கம்பு, 3 மூட்டை ராகி, 2 மூட்டை கொள்ளு, தலா ஒரு மூட்டை வேடர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்கு வந்தன.இதில், சராசரியாக ஒரு மூட்டை எள் 7,096 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 1,430, வரகு 1867, கம்பு 1,861, ராகி 2,.652, வேர்க்கடலை 7,505, உளுந்து 6,552 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. 167 விவசாயிகள் கொண்டு வந்த 308 மூட்டை தானியங்கள் 15 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X