சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.௭,௫௦௦க்காக கொலை: கொடூர வாலிபர் கைது

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே, கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரெட்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ், 21; தனியார் கல்லுாரியில், பி.சி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இவர், மரூர், காட்டுக் கொட்டாயைச் சேர்ந்த ஸ்டீபன், 27, என்பவரிடம் பைக் வாங்குவதற்காக, 7,500 ரூபாய் கொடுத்திருந்தார். நீண்ட நாட்கள் ஆகியும், பைக் வாங்கித் தரவில்லை; பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.கடந்த, 18ம் தேதி, பணத்தை திரும்ப வாங்கி வருவதாக, தன் பெற்றோரிடம் கூறிச் சென்ற மனோஜ், வீடு திரும்பவில்லை. மறுநாள், மாடாம்பூண்டி காப்புக் காடில், காயங்களுடன் இறந்து கிடந்தார். நேற்று, மரூர் வி.ஏ.ஓ., மணியிடம், ஸ்டீபன் சரணடைந்தார்.

அவரை போலீசார் கைது செய்தனர்.ஸ்டீபன் வாக்குமூலம்:பணத்தை திருப்பி கேட்டு, மனோஜ் நச்சரித்து வந்ததால், தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். 18ம் தேதி, பணம் கேட்டு வந்த மனோஜை, மாடாம்பூண்டி காப்புக் காட்டிற்கு அழைத்துச் சென்று, மது வாங்கி கொடுத்தேன்.போதையில் மயங்கிய மனோஜிடம் இருந்த மொபைல் போன், மோதிரத்தை பறித்துச் சென்று, பகண்டை கூட்ரோடு சாலை அடகு கடையில், மோதிரத்தை விற்று, சந்தேகம் ஏற்படாமல் இருக்க, அவரது வங்கி கணக்கிற்கு, ஏ.டி.எம்., மூலம், 7,500 ரூபாய் அனுப்பினேன்.திரும்பி வந்து, காப்புக் காட்டில் போதையில் கிடந்த மனோஜை கல்லால் குத்தியும், கழுத்தில் காலை வைத்து மிதித்தும் கொலை செய்தேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X