பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 139 பேருக்கு கொரோனா: பாதிப்பு 2,183, பலி 36 ஆக உயர்வு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் நேற்று, 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஒருவர் பலியானார்.கோவை, மலுமிச்சம்பட்டியில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும், 32 வயது அலுவலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.கிணத்துக்கடவு அருகே விவசாய இடுபொருள்கள் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்த, நால்வருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. விற்பனை நிலையத்தை மூட சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் இருவர்; சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு போலீஸ்காரர் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், நான்கு போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.87 ஆண்கள், 52 பெண்கள் என, 139 பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது. மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை, 2,183 ஆக உயர்ந்துள்ளது. கோவை, ராஜவீதியை சேர்ந்த 70 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். பலி எண்ணிக்கை, 36 ஆக உயர்ந்துள்ளது.72 பேர் டிஸ்சார்ஜ்கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 72 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 902 பேர் குணமடைந்த நிலையில், 1,245 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X