பொது செய்தி

இந்தியா

சொந்த ஊர்களுக்கு சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் மீண்டும் வருகை!

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
Migrant workers, Migrants, returning, Corona crisis, வெளி மாநில தொழிலாளர்கள்

புதுடில்லி : 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையில், இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், சொந்த ஊர்களுக்கு சென்ற வெளி மாநில தொழிலாளர்கள், பணிக்கு திரும்ப துவங்கி உள்ளனர். பல்வேறு நிறுவனங்களும், தங்கள் சொந்த செலவில், தொழிலாளர்களை அழைத்து வரும் பணியை முடுக்கிவிட்டுள்ளன.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வந்த வெளி மாநில தொழிலாளர்கள், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால், ஸ்தம்பித்து கிடக்கும் பொருளாதாரத்தை சீரமைக்க, மத்திய அரசு, ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது.

தொழிற்சாலைகள், கட்டட பணிகள் ஆகியவை, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளுடன் துவங்க, அனுமதி அளிக்கப்பட்டது. இவ்விரு துறைகளும், வெளி மாநில தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் சார்ந்து இருப்பதால், அரசு அனுமதி அளித்தும், பணிகளை முழு வீச்சில் துவங்க முடியாத நிலை இருந்தது. இதற்கிடையே, சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களும், தங்கள் கிராமங்களில் தொழில் வாய்ப்புகள் இல்லாததால், வருமானம் இன்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தாங்கள் பணி செய்த ஊர்களுக்கு, தொழிலாளர்கள் திரும்ப துவங்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்கள், தொழிலாளர்களை அழைத்து வரவும், அவர்களை, 14 நாட்கள் தனிமைப்படுத்தவும், தங்கள் சொந்த செலவில் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

மஹாராஷ்டிராவின், மும்பை நகரில், தஹிசார் கிழக்கு -- அந்தேரி கிழக்கு இடையிலான, ஏழாவது மெட்ரோ ரயில் வழித்தட பணிக்காக, ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்களை, மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி ஆணையம், சமீபத்தில் அழைத்து வந்துள்ளது. தொழிலாளர்கள் தட்டுப்பாட்டை சமாளிக்க, மாநில அரசின் கட்டுமான பணிகளில், உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, மஹாராஷ்டிர அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதோடு, திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 17 ஆயிரம் பணியிடங்களுக்காக, 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு முகாம், சமீபத்தில் நடத்தப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்களின் இடத்தை நிரப்ப, உள்ளூர்வாசிகளை வேலைக்கு அமர்த்தும் முயற்சிகளிலும், பல்வேறு மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து, மஹாராஷ்டிர மாநில, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் நவாப் மாலிக் கூறியதாவது: எந்தெந்த பணிகளுக்கு, தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளது என்பதை கண்டறிய, தொழில் அமைப்புகள் மற்றும் அரசு துறைகளுடன், தொடர்பில் இருந்து வருகிறோம். உள்ளூரில் இருந்தும் பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம். பல்வேறு துறைகளிலும், பணிகள் துவங்கப்பட்டுவிட்ட தகவல் அறிந்து, வெளிமாநில தொழிலாளர்கள் பலர், அவர்களாகவே திரும்ப துவங்கி உள்ளனர்.

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீஹார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மும்பை மற்றும் புனே திரும்பி உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.


கேரளாவில் கட்டாய, 'ரேபிட் டெஸ்ட்'

'கேரளா திரும்பும் வெளி மாநில தொழிலாளர்கள், 'ரேபிட்' பரிசோதனை செய்து கொள்வதையும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதையும், கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்' என, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கான இந்த ரேபிட் பரிசோதனைக்கான செலவை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்க வேண்டும் எனவும், தனி நபராக இருந்தால், அவரே செலவை ஏற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அறிகுறிகளுடன் வரும் தொழிலாளர்களுக்கு, பி.சி.ஆர்., பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று இல்லை என்பது உறுதியானாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல், கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202021:19:04 IST Report Abuse
Mani நம்ம உள்ளூர் காரன் 3 நாள் செய்யர வேலய இவன் 2 நாள்ள செய்வான் அதுதான் நிஜம். ஓப்பி அடிக்க மாட்டனுங்க ... லோக்கல் ஆளுங்க பிராடு பசங்க .... வேலை நடகாது காசு கொடுத்தாலும்
Rate this:
Cancel
srinivasan - chaennal,இந்தியா
21-ஜூலை-202019:16:35 IST Report Abuse
srinivasan First why they have to go to their native place. They came for work and earn money Which is not avaiy in their place. Because of that lot of confy and the covid sorry fast. Now they are coming back again the disease will spread fast.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜூலை-202018:01:04 IST Report Abuse
Endrum Indian இதற்குத்தான் மூளையற்ற செயல் என்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X