அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் முற்றுகை

Added : ஜூலை 21, 2020
Share

சின்னசேலம்; ராயப்பனுார் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.சின்னசேலம் அடுத்த ராயப்பனுார் கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஊராட்சி அலுவலகத்தை நேற்று காலை 11:00 மணிக்கு முற்றுகையிட்டனர். சின்னசேலம் துணை பி.டி.ஓ., ஆறுமுகம், முற்றுகையிட்ட மக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கோரிக்கைகளை மனுவாக கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.அதன்பேரில் பொதுமக்கள் அளித்துள்ள மனு:ராயப்பனுார் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் மற்றும் ராயப்பனுார் - வாசுதேவனுார் தார்சாலையினை புதுப்பிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைக்க வேண்டும். தேங்கியுள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் வரவு, செலவு கணக்கினைக் காட்ட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவைப் பெற்றுக் கொண்ட பி.டி.ஓ., கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து அனைவரும் 12:30 மணிக்கு கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X