அரசியல் செய்தி

தமிழ்நாடு

உண்மை குற்றவாளியை கைது செய்யுங்க! போலீஸ் கமிஷனரிடம் பா.ஜ., வலியுறுத்தல்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கோவை:'கோவை கோவில்களில் தீ வைத்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்' என, பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.கோவை, ஐந்துமுக்கு மாகாளியம்மன் கோவிலுக்குள், டயரில் தீ பற்றவைத்து வீசி விட்டு, அங்கிருந்த திரிசூலம் வளைத்து சேதப்படுத்தப்பட்டது. இதேபோல, கோட்டைமேடு விநாயகர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் அருகே மாப்பிள்ளை விநாயகர் கோவில், நல்லாம்பாளையம் செல்வவிநாயகர் கோவிலிலும், தாக்குதல் நடத்தப்பட்டது.இது தொடர்பாக, சேலத்தை சேர்ந்த கஜேந்திரன்,48, என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.பா.ஜ., அதிருப்திபா.ஜ., தேசிய செயலர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், கோவை போலீஸ் கமிஷனரை சந்தித்து, நேற்று மனு அளித்தனர்.அதில், 'கோவையில், நான்கு கோவில்களில் தீ வைத்து கொடும்செயலில் ஈடுபட்டதாக கைதான நபர், மன நலம் பாதிக்கப்பட்டவர்போல, காவல்துறையால் சொல்லப்படுவதை, ஏற்க முடியாது. அமைதியை காக்க, காவல்துறையும், தமிழக அரசும் எடுக்கும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. உண்மை குற்றவாளிகளை கைது செய்து, பின்புலமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X