பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' இல்லையா? ஆறு மாதம் சிறை!

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

ஊட்டி : 'நீலகிரி மாவட்டத்தில், முக கவசம் இல்லாமல், வெளியில் சுற்றுபவர்களுக்கு, ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:மாவட்டத்தில், சில நிகழ்ச்சிகளை விதிமீறி நடத்தியதால், இரு வாரங்களில், 500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள் மீது, வழக்கு பதியப்பட்டு உள்ளது. முக கவசம் அணியாமல், தனி நபர் இடைவெளியை பின்பற்றாமல் இருந்தாலும், தனிமைப்படுத்தியவர்கள் வெளியில் சுற்றினாலும், ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். எச்சில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.அனுமதியில்லாமல் திருமணம் உட்பட தனி நபர் நிகழ்ச்சிகளை நடத்தினால், ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X