மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளிபிளஸ் 2 தேர்வில் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளிபிளஸ் 2 தேர்வில் சாதனை

Added : ஜூலை 21, 2020
Share

திண்டிவனம்; திண்டிவனம் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.திண்டிவனம் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில், 241 பேர் தேர்வு எழுதியதில், 240 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.6 சதவீதமாகும். பள்ளியை சேர்ந்த மோனிஷா 564 , சந்தோஷ் 556, ரக்ஷனா 553 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனர்.கணக்குபதிவியல் பாடத்தில் 2 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 5 மாணவர்களும் நுாற்று நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். 22 பேர் 500 மதிப்பெண்ணிற்கு மேலும், 34 பேர் 450க்கு மேலும், 76 பேர் 400க்கு மேலும், 66 பேர் 350க்கு மேலும், 25 பேர் 300க்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை, பள்ளியின் தாளாளரும், முதல்வருமான அருட்சகோதரர் அந்தோணிசாமி, துணை முதல்வர் அலெக்சாண்டர் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X