பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம்: மோடி

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
PM, Modi, IBM, great time, invest in India, Prime Minister, Modi, IBM CEO, இந்தியா, முதலீடு, சிறந்த தருணம், மோடி

புதுடில்லி : இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த தருணம்; தொழில்நுட்ப துறையில் முதலீடுகளை நாடு வரவேற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஐ.பி.எம். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணாவுடன் 'ஆன்லைன்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அளவில் அன்னிய நேரடி முதலீடுகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

உலக அளவிலான வினியோக சங்கிலி போல் உள்நாட்டிலும் சிறப்பான வினியோக சங்கிலியை உருவாக்க முடியும் என நாங்கள் நிரூபித்துள்ளோம்.கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் திட்டத்தை அரசு ஆதரிக்கிறது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த தருணம் இது என கருதுகிறேன். தொழில்நுட்ப துறையில் புதிய முதலீடுகளை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நோய் பாதிப்பை முன்னதாக கண்டறியும் நடவடிக்கைகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் ஐ.பி.எம். நிறுவனம் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பிரதமரின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை கிருஷ்ணா பாராட்டினார். அத்துடன் இந்தியாவில் ஐ.பி.எம். நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீட்டு திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
21-ஜூலை-202019:52:03 IST Report Abuse
Somiah M தனியார் தொழில் துறையை வளர்த்து விடுவதால் அரசுக்கோ மக்களுக்கோ என்ன பெரிய லாபம் வந்துவிடப் போகிறது ?
Rate this:
Cancel
21-ஜூலை-202019:13:10 IST Report Abuse
ஆப்பு நாம இன்னும் பணக்காரநாடுகளின் அவுட்சோர்சிங் தொழில்களையே எதிர்பார்த்து அழைப்பு விடும் நிலையில் இருக்கிறோம். அவிங்க என்னடான்னா, தங்கள் தயாரிப்புக்களை நம்ம கிட்டே விக்கப் பாக்குறாங்க. ரஃபல், அப்பாச்சி, எஸ்400 எல்லாம் நாம வாங்குனாதான் அங்கே வேலை. கொரோனா புண்ணியத்துல அவிங்கவங்க நாட்டுல அவிங்கவங்களுக்கு வேலை குடுக்கப் பாக்கறாங்க.
Rate this:
Cancel
N.Murugan - Nagercoil,இந்தியா
21-ஜூலை-202017:44:13 IST Report Abuse
N.Murugan புதிய தொழில் தொடங்கினால் பிரச்சனை இல்லை ஆனால் இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்பது மக்களை ஏமாற்றும் செயல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X