சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணைக்கு அழைப்பு விஷம் குடித்த தாய், மகள்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
துாத்துக்குடி : விசாரணைக்கு போலீசார் அழைத்ததால், தாய், மகள் விஷம் குடித்தனர். போலீசை கண்டித்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர். துாத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியில், மாரியப்பன், 45, என்பவரது ஆட்டை, இந்திரா நகரைச் சேர்ந்த ராஜுவின் வளர்ப்பு நாய் கடித்தது. இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில், ராஜுவின் மகன் காயமடைந்தார்.மாரியப்பன் தரப்பில், 26 பேர் மீது, போலீசார்
 விசாரணைக்கு அழைப்பு விஷம் குடித்த தாய், மகள்

துாத்துக்குடி : விசாரணைக்கு போலீசார் அழைத்ததால், தாய், மகள் விஷம் குடித்தனர். போலீசை கண்டித்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

துாத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியில், மாரியப்பன், 45, என்பவரது ஆட்டை, இந்திரா நகரைச் சேர்ந்த ராஜுவின் வளர்ப்பு நாய் கடித்தது. இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில், ராஜுவின் மகன் காயமடைந்தார்.மாரியப்பன் தரப்பில், 26 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை பிடித்து சென்றனர். நேற்று காலை, போலீசார் விசாரணைக்கு அழைத்ததால், மாரியப்பன் மனைவி, மகள் விஷம் குடித்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாரியப்பன் உறவினர்கள், போலீசை கண்டித்து, செய்துங்கநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் முன், மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் சந்திரன் தலைமையில் பேச்சு நடந்தது. போலீசார் பிடித்து வைத்திருந்த நபரை விடுவித்ததால், போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X