பொது செய்தி

தமிழ்நாடு

தரிசு நில மேம்பாட்டு திட்டம் துவக்கி வைப்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

திண்டிவனம்; கீழ்எடையாளம் கிராமத்தில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் துவக்க விழா நடந்தது.தரிசு நிலங்களில் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக, கீழ்எடையாளம் கிராமத்தில் தரிசு நிலங்களில் உள்ள முட்கள், புதர், செடி, கொடிகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் முன்னிலை வகித்தார்.இத்திட்டப்பணியை, வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் துவக்கி வைத்து பேசுகையில், சாகுபடி செய்யாமல் தரிசாக உள்ள நிலங்களை மேம்படுத்தி சாகுபடி செய்யும் நிலைக்கு கொண்டு வர ஒரு ஹெக்டருக்கு 10 ஆயிரம் மானியம் வழங்கி, விசாயிகளை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் புதர் மண்டி கிடக்கும் நிலங்களை சாகுபடி செய்யும் நிலைக்கு கொண்டு வர திடல் சுத்தம் செய்தல், முட்புதர்களை அகற்றுதல், நிலம் சமன் படுத்தி, உழவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒரு ஹெக்டருக்கு 10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் என்றார்.திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அன்புமணி, தரிசு நிலங்களில் மழை நீர் சேகரிப்பு குறித்து எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில், மரக்காணம் வேளாண்மை உதவி இயக்குநர் கருணாநிதி, விழுப்புரம் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் சந்துரு, செஞ்சி வேளாண்மை உதவி இயக்குநர் ஜானகிராமன், வேளாண்மை அலுவலர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X