பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா மையத்தில் கூடுதல் தனிப்பிரிவு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கோவை:கோவை கொடிசியா சிகிச்சை மையத்தில், 350 படுக்கைகளுடன் கூடுதலாக தனி பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த மே இறுதி வரை மொத்தமாகவே, கோவை மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, 146 என்ற அளவில் இருந்தது. தற்போது, 2,000 கடந்து விட்டது. நோய் தொற்று அதிகரிப்பதால், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளில் பிரத்யேக பிரிவுகள், கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. கொடிசியா பிரத்யேக மையத்தில், 350 படுக்கை வசதிகளுடன் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, கொடிசியா வளாகத்தின் மற்றொரு அரங்கில், 350 படுக்கை வசதிகளுடன் தனிப்பிரிவு அமைக்கும் பணி நடந்துவருகிறது. இப்பணிகளை மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X