தமிழ்நாடு

அமோகம்: புதிதாக சாலை அமைத்து மணல் திருட்டு ஏரிகளை விட்டுவைக்காத மணல் கொள்ளையர்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

செஞ்சி: செஞ்சி அருகே உள்ள முனைப்பா ஏரியில் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. மணல் கடத்தல் காரர்கள் புதிதாக ரோடு போட்டு மணல் திருடியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசு பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கியும் மணல் கிடக்காமல் நுாற்றுக்கணக்கானவர்கள் வீடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் செஞ்சி தாலுகாவில் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் இரவு பகல் எந்த நேரமும் தடையும் இன்றி மணல் கிடைத்து வருகிறது. செஞ்சி பகுதியில் மணல் திருடப்படும் இடங்களாக வராகநதி, சங்கராபரணி, தொண்டியாறு என எல்லோர் கவனமும் இந்த திசையில் உள்ளது. ஆனால் கெங்கவரம், பழவலம் கிராமங்களில் ஓசைப்படாமல் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மணலை காட்டு ஓடைகளில் இருந்தும், ஏரியில் இருந்தும் திருடி விற்பனை செய்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை ஒட்டி உள்ள பழவலம் கிராமத்தில் முனைப்பா ஏரி உள்ளது. மலைகள் சூழ்ந்த இந்த ஏரிக்கு பாக்கம் மேற்கு மலை காடுகளில் இருந்து வெள்ளம் வருகிறது. மலை வெள்ளம் வரும் போது கூடவே மணல் வளமும் ஏரியில் நிரம்பி விடுகிறது. தண்ணீர் வற்றியதும் இரண்டு ஆள் ஆழத்திற்கு இங்கு பூமிக்கு அடியில் மணல் கிடைக்கிறது. இந்த இடத்தில் கடந்த சில நாட்களாக இரண்டு ஜே.சி.பி.,யை கொண்டு இரவு பகலாக மணல் எடுத்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் குவித்து வைத்துள்ளனர்.இவற்றை டிராக்டர் மூலம் வேட்டவலம், கண்டாச்சிபுரம் பகுதியில் இரவு நேரத்தில் விற்பனை செய்து வருகின்றனர். மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் வந்து செல்ல, அவர்கள் சொந்த செலவில் அரசு புறம்போக்கு இடத்தில் ஏரியை ஒட்டி உள்ள குன்று பகுதியில் வட்ட சாலை அமைத்துள்ளனர். இதே போல் கெங்கவரம் கட்டில் இருந்து ஏரிக்கு வெள்ளம் வரும் மொக்கை ஓடையிலும் இரவு பகலாக மணல் திருடி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் ஓடை உள்ள பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டு மழை வரும் போது பக்கவாட்டில் உள்ள மண் ஓடையில் சரிந்து விழுந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் ஓடையில் சரிந்து வருகின்றன.செஞ்சி தாலுகாவிற்கு உட்பட இந்த இரண்டு இடங்களிலும் உள்ள ஓடைகளில் இதுவரை மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது வருவாய்த்துறையோ, போலீசாரோ ஒரு வழக்கு கூட பதிய வில்லை.நேற்று முன்தினம் விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில் செஞ்சி டி.எஸ்.பி., ரவீந்திரன் திடீரென ஆய்வு நடத்தி இரண்டு டிராக்டர்களை பரிமுதல் செய்து கண்டாச்சிபுரம் போலீசில் ஒப்படைத்தார். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம உதவியாளர், வி.ஏ.ஓ., என எல்லோரும் உள்ளனர். இவர்களுக்கு புதிதாக ரோடு போட்டு மணல் திருட்டு நடத்து வருவது கூட தெரியாமல் இருக்குமா என கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இந்த பகுதிக்கு அதிகாரிகளும் ஆய்வுக்கு வருவதில்லை.

எனவே இங்கு நடக்கும் மணல் திருட்டிற்கு அதிகாரிகள் உடைந்தையா என்ற சந்தேகம் பொது மக்களிடம் எழுந்துள்ளது. பட்ட வர்தனமாக நடந்து வரும் மணல் திருட்டை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முனைப்பா ஏரில் மணல் திருட டிராக்டர் ஜே.சி.பி., சென்று வருவதற்காக ஏரியின் கரைகளை உடைத்துள்ளனர். ஒரு பக்கம் ஏரி குடிமாரமத்து பணியில் பல லட்சம் செலவு செய்து ஏரி கரையை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. மறு பக்கம் ஏரி கரையை உடைத்து மணல் திருட்டு நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X