கொரோனா தொற்று பகுதிகளில் சப் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று பகுதிகளில் சப் கலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 21, 2020
Share
திண்டிவனம்;திண்டிவனத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களை,சப்-கலெக்டர் ஆய்வு நடத்தினார்.திண்டிவனம் நகராட்சி பகுதியில் மட்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட் டவர்களில் ஐந்து பேர் இறந்தனர். நகரப்பகுதி மூழுவதும் பரவலாக தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் நகரில் மட்டும் நேற்று முன்தினம்

திண்டிவனம்;திண்டிவனத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களை,சப்-கலெக்டர் ஆய்வு நடத்தினார்.திண்டிவனம் நகராட்சி பகுதியில் மட்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட் டவர்களில் ஐந்து பேர் இறந்தனர். நகரப்பகுதி மூழுவதும் பரவலாக தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் நகரில் மட்டும் நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவிற்கு 28 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதைத்தொடர்ந்து திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, நேற்று காலை, கிடங்கல்(1) பகுதியிலுள்ள முத்துகிருஷ்ணன் தெருவில் தொடங்கி, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிளுக்கும் நேரில் சென்று, நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று ஆய்வு நடத்தினர்.ஆய்வின் போது, திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஷ்ணுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள்உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X