பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் நேற்று கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்.

விருதுநகரில் 143 பேர் பாதிக்கப்பட்டனர்.மதுரையில் நேற்று 106 பேருக்கு கொரோனா உறுதியானது. நகரில் 85 பேர், புறநகரில் 21 பேர் பாதிக்கப்பட்டனர். 101 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 4934 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பாதிப்பு 8357 ஆனது. 3263 பேர் சிகிச்சையில் உள்ளனர். 85, 75, 72, 67 வயது முதியவர்கள், 52 வயது ஆண், 58 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களில் ஒருவர் போலீஸ் எஸ்.ஐ., ஆவார். மொத்த பலி 160 ஆனது.திண்டுக்கல் பாதிப்பு 78திண்டுக்கல்லில் தொடர்ந்து 6 நாட்களாக கொரோனா பாதிப்பு 100ஐ தொட்டது. நேற்று சற்று குறைந்து 78 பேரை கொரோனா தாக்கியது.

இதில் ஆத்தூரைச் சேர்ந்த 11 பேரூராட்சி ஊழியர்கள், நத்தம் 3 மின்வாரிய ஊழியர்கள், பழநி 7 தீயணைப்பு ஊழியர்கள் 2 சுகாதார ஊழியர்கள் அடங்குவர்.தேனி பலி 5தேனி மாவட்டம் ராமசாமிநாயக்கன்பட்டி மத்திய துணை ராணுவ வீரர், மருத்துவக் கல்லுாரி டாக்டர், பெரியகுளம் வடகரை இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள், ஆண்டிபட்டி வங்கி மேலாளர் உள்பட 129 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.தேனி ஆர்.ஆர்., நகர் முதல் தெரு 75 வயது மூதாட்டி, பாரஸ்ட் ரோடு முதல் தெரு 85 வயது முதியவர், பழனிச்செட்டிபட்டி 53 வயது பெண், சின்னமனுார் சீலையம்பட்டி நடுத்தெரு 60 வயது முதியவர், அல்லிநகரம் 66 வயது முதியவர் ஆகியோர் பலியாகினர்.

மாவட்ட பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது.ராமநாதபுரம் பாதிப்பு 95ராமநாதபுரம் ஆயுதப்படை போலீசார் இருவர், பரமக்குடி போலீஸ், கடலாடி ஊராட்சி ஒன்றிய இரு பணியாளர் உள்பட 95 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. பாதிப்பு எண்ணிக்கை 2537 ஆக உயர்ந்தது.--- கீழக்கரையை சேர்ந்த 70 வயது பெண் பலியானார். இதனால் பலி 61 ஆனது.சிவகங்கை பலி 2சிவகங்கையில் 2, காரைக்குடி - 24, திருப்புவனம் 4, சிங்கம்புணரி -1, மானாமதுரை - 1, காளையார்கோவில் 2, தேவகோட்டை -2, திருப்புத்துார் - 2 பேர் உட்பட 42 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதில் அரசு டாக்டர் அடங்குவர்.தேவகோட்டை கள்ளிக்கோட்டைசோமு தெரு 65 வயது முதியவர், புளியடிதம்பம் 61 வயது முதியவர் உயிரிழந்தனர்.விருதுநகர் பாதிப்பு 143விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஆயுதப்படை போலீஸ் உட்பட 143 பேருக்கு கொரோனா உறுதியானது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருதுநகர் ஓட்டல் அதிபர் பலியானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X