பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

செஞ்சி; செஞ்சியில் 5 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போலீசார் குடும்பத்தினருக்கு நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. செஞ்சி போலீஸ் நிலையத்தில் பணி புரியும் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டது. இங்கு பணிபுரியும் மீதம் உள்ள போலீசாருக்கும், போலீசாரின் குடும்பத்தினருக்கும் சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா பரிசோதனைக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். இதில் 71 பேருக்கு பரிசோதனை நடந்தது. செஞ்சி பெரியகரம் பகுதியிலும் கொரோனா பரவல் அதிகரித்ததால் செல்வவிநாயகர் கோவில் பகுதியில் முகாம் அமைத்து பொது மக்களுக்கு பரிசோதனை நடத்தினர். முகாமை சப் கலெக்டர் டாக்டர் அனு ஆய்வு செய்தார். தாசில்தார் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X