பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சிகளில் கரைந்த பொதுநிதி சம்பளம் வழங்குவதில் சிக்கல்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கம்பம் : தமிழகத்தில் 124 நகராட்சிகளிலும் பொதுநிதி கரைந்து போனது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நகராட்சிகளின் முதுகெலும்பாக பொதுநிதி உள்ளது. வீடு, சொத்து, தொழில் வரிகள், குத்தகை வருவாய் உள்ளிட்ட பல வரியினங்கள் இதில் அடங்கும். கொரோனா காரணமாக மார்ச் முதல் வரி வசூல் செய்யப்படவில்லை. ஏற்கனவே இருந்த நிதியானது சம்பளம், மின்கட்டணம், கொரோனா தடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டு காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பணியாளர்களுக்கு சம்பளமாக ரூ.40 முதல் 50 லட்சம் வரையும், மின்கட்டணமாக மாதந்தோறும் ரூ.லட்சக்கணக்கில் செலவாகிறது. வருவாய் இன்றி செலவு செய்வதால் பொதுநிதி காலியாகும் நிலை உருவாகியுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது, மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X