கொரோனா தடுப்பு மருந்து எய்ம்சில் பரிசோதனை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து 'எய்ம்சில்' பரிசோதனை துவக்கம்

Added : ஜூலை 21, 2020
Share
புதுடில்லி : டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி செய்யப்படும் பரிசோதனைகள் துவங்கப்பட்டுள்ளன.நாட்டில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், 'பாரத் பயோடெக்' என்ற நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை

புதுடில்லி : டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி செய்யப்படும் பரிசோதனைகள் துவங்கப்பட்டுள்ளன.நாட்டில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், 'பாரத் பயோடெக்' என்ற நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இதற்கு, 'கோவாக்சின்' என பெயரிடப் பட்டுள்ளது.இந்த தடுப்பு மருந்தை, முதல் கட்டத்தில், 375 பேருக்கும், இரண்டாம் கட்டத்தில், 750 பேருக்கும் செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டில்லி எய்ம்ஸ் உட்பட, 12 மருத்துவமனைகளை, ஐ.சி.எம்.ஆர்., தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில், மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி செய்யப்படும் பரிசோதனைகள், நேற்று துவக்கப்பட்டுள்ளன. இது குறித்து, எய்ம்ஸ் இயக்குனர் ரண்தீப் குலேரியா நேற்று கூறியதாவது:இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உலகிலேயே குறைந்த இறப்பு விகிதத்தை கொண்ட நாடுகளில், இந்தியாவும் ஒன்று.இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, கோவாக்சின் உருவாக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் மிகப் பெரிய சாதனையாகும்.

இந்த மருந்தை, வேறு எந்த நோயாலும் பாதிக்கப்படாத, 18 - 55 வயதுக்குட்பட்ட மக்களிடம் தந்து பரிசோதிக்கவுள்ளோம். இரண்டாம் கட்ட பரிசோதனையில், 12- 65 வயதுக்குட்பட்ட மக்களுக்கு, செலுத்தி பரிசோதிக்க இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X