கருப்பர் கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து புதுச்சேரி மாநில இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.முருகரை வழிபடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப் படுத்திய கருப்பர் கூட்டத்தினரையும், அவர்களுக்கு புதுச்சேரியில் அடைக்கலம் கொடுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும். இவர்கள் நடத்தி வரும் யூ- டியூப் சேனலை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரி மாநில இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.முத்தியால்பேட்டை, சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில் நடந்த போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி புதுச்சேரி மாநில தலைவர் மஞ்சினி தலைமை தாங்கினார். பொதுச் செயலர் பிரகாஷ், மாநில அமைப்பு குழு தலைவர் ஜம்புலிங்கம் முன்னிலை வகித்தனர். அமைப்பு குழு செயலர் சாமிநாதன், காமராஜர் நகர் தொகுதி இளைஞரணி தலைவர் சித்தானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X