பெரியகாலாப்பட்டில் பா.ஜ., சேவை மைய திறப்பு விழா| Dinamalar

இந்தியா

பெரியகாலாப்பட்டில் பா.ஜ., சேவை மைய திறப்பு விழா

Added : ஜூலை 21, 2020
Share

புதுச்சேரி; பெரியக்காலாப்பட்டில் பா.ஜ.,சேவை மைய திறப்பு விழா நடந்தது.புதுச்சேரி பா.ஜ.,சார்பில் பெரியக்காலாப்பட்டில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.,சேவை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஓ.பி.சி., அணி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கிானர்.மாநில தலைவர் சாமிநாதன் சேவை மையத்தை திறந்து வைந்தார். தொடர்ந்து வேல்முருகன் தலைமையில் கட்சியில் இணைந்த காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த கலைவாணி, பாரதிராஜா, பிரபாகர், குமரன், செவ்வராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சால்வை அணிவித்து வரவேற்றார்.பின்னர் அவர் பேசியதாவது:மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நேர்மையான ஆட்சி போல், புதுச்சேரி மாநிலத்திற்கும் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எனவே வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டோம். ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே மாதிரியான கட்சி ஆட்சிக்கு வந்தால் தான், புதுச்சேரி மாநிலத்திற்கு வளமான, ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்றார்.நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலர்கள் செல்வம், மோகன்குமார், மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், காலாப்பட்டு தொகுதி தலைவர் பிரகாஷ், ஓ.பி.சி., அணி நிர்வாகிகள் சரவணக்குமார், கிருஷ்ணராஜ், மகளிரணி நிர்வாகிகள் ஜெயலட்சுமி, கனகவள்ளி, கலையரசி, பவாணி, வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X