இந்தியா

இயந்திரம் மூலம் கரும்பு நடவு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்; கண்டமங்கலம் அடுத்த ஆழியூரில் இயந்திரம் மூலம் கரும்பு நாற்று நடவு குறித்த செயல் விளக்க முகாம் நடந்தது.இ.ஐ.டி., பாரி (இந்தியா) சர்க்கரை ஆலை நிறுவனம் மற்றும் மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனமும் இணைந்து கரும்பு நாற்று நடவு செய்யும் இயந்திரத்தை உருவாக்கி உள்ளது. இதன் செயல் விளக்க முகாம், கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் கிராமத்தில் ராமதாஸ் நிலத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை நிறுவன இணை உப தலைவர் (கரும்பு) சங்கரலிங்கம் தலைமை தாங்கி கரும்பு நாற்றுக்கள் நடவு இயந்திரத்தை துவக்கி வைத்தார். முதுநிலை மேலாளர் (கரும்பு விரிவாக்கம்) சிவராமன், கரும்பு அலுவலர் சுந்தர்கணேஷ் மற்றும் இ.ஐ.டி., பாரி, மகேந்திரா நிறுவனத்தின் அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.வழக்கமாக கரும்பு கரணைகளைக் கொண்டு ஆட்கள் மூலம் நடுவது வழக்கம்.தற்போது, பண்ணை இயந்திரம் மூலம் கரும்பு நாற்றுக்கள் நடவு செய்யும்முறை பிரபலம் அடைந்து வருகிறது. இதனைடிராக்டர் மூலம் இயக்கலாம்.இதன் மூலம் கரும்பு சாகுபடியில் நடவுக்காக ஆகும் ஆட்களுக்கான செலவு குறையும்.ஒரு நளில் 4 ஏக்கர் வரை கரும்பு நாற்றுகளை சுலபமாக நடவு செய்துவிடலாம். ஒரே சீரான இடைவெளியில் கரும்பு நாற்றுகள் நடப்படுவதால், கரும்பு வளர்ச்சி சீராக செழிப்பாக வளரும், கரும்பு நல்ல மகசூல் கிடைக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X