துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து மனு

Added : ஜூலை 21, 2020 | |
Advertisement
துாத்துக்குடி : துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்தான் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என ஒரு தரப்பினரும், ஆலையை பராமரிப்பிற்கு கூட திறக்க அனுமதிக்க கூடாது என இன்னொரு தரப்பினரும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளித்தனர். துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 மே 22ல் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13 பேர்

துாத்துக்குடி : துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால்தான் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என ஒரு தரப்பினரும், ஆலையை பராமரிப்பிற்கு கூட திறக்க அனுமதிக்க கூடாது என இன்னொரு தரப்பினரும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுஅளித்தனர்.

துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 மே 22ல் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியாயினர். மே 28 முதல் ஆலையை தமிழக அரசு மூடியது. தற்போது வருடாந்திர பராமரிப்பிற்காக 700 தொழிலாளர்களை அனுமதிக்ககோரி, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டக்குழுவினர் மனு அளித்தனர்.மனுவில், 'ஆலைக்கழிவுகள் முழுமையாக அகற்றிவிட்டதாக அரசு தெரிவித்துள்ள சூழலில் மீண்டும் பராமரிப்பிற்கு அரசு அனுமதிக்ககூடாது.

அனுமதித்தால் மீண்டும் ஆலையை திறக்கவாய்ப்புள்ளது' என்ற அம்சங்கள் உள்ளன. முன்னதாக துாத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளனர். வேலைவாய்ப்பு மூலம் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. எனவே மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராஜாவின் கோவில் ஊராட்சி தலைவர் அன்புராஜ் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.தி.மு.க.,வை சேர்ந்த இவரது மனுவில், மாநிலத்தின் வளர்ச்சியை விரும்பாத சில அமைப்புகளின் துாண்டுதலின்பேரில் போராட்டங்கள் நடந்தன.

தற்போது தொழிற்சாலையை திறந்தால் மட்டுமே நாங்கள் வாழமுடியும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு சில ஊராட்சி தலைவர்களும் ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X