திருச்சி : தங்கள் நிறுவனத்தில், ௧ லட்சம் டிபாசிட் செய்தால், தினமும், 500 ரூபாய் வட்டி தருவதாக கூறி, 25 கோடி ரூபாய் ஏமாற்றிய, வி.ஏ.ஓ., மீது, திருச்சி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்தவர் வைரபெருமாள். இவருடன், 30க்கும் மேற்பட்டோர் சேர்ந்து, நேற்று, திருச்சி கலெக்டர் சிவராஜிடம் அளித்த புகார்: துறையூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். வி.ஏ.ஓ.,வான இவர், திருச்சி மற்றும் துறையூரில், 'மைஸ்' என்ற நிதி நிறுவனம் நடத்தினார். இதில், '௧ லட்சம் ரூபாய் டிபாசிட் செய்தால், தினமும், ௫௦௦ ரூபாய் வீதம், ஓராண்டு வட்டி தருவதாகவும், ஓராண்டு முடிந்த பின், அசல், ௧ லட்சம் ரூபாயும் திருப்பித் தரப்படும்' என்ற திட்டத்தை அறிவித்தார்.இத்திட்டத்தில் சேரும்படி, முத்தரசநல்லுார் வட்டார வள மையத்தில், பயிற்றுனராக வேலை பார்க்கும் சிவநேசன் வற்புறுத்தினார்.
'பணத்துக்கு நானே பொறுப்பு' எனவும் கூறினார். இதை நம்பி, 47 லட்சம் ரூபாய், டிபாசிட் செய்தேன்.மூன்று மாதம் வரை, தினமும் பணம் வந்தது; அதன்பின் வரவில்லை. என்னைப் போல், திருச்சி, தஞ்சை, துறையூரைச் சேர்ந்த பலரும், 'மைஸ்' நிறுவனத்தில், 25 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கட்டி உள்ளனர்.சில மாதங்களாக, யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. திருச்சியில் உள்ள, அலுவலகத்தை காலி செய்து விட்டனர். துறையூர் அலுவலகமும், ஒரு மாதத்துக்கு மேலாக பூட்டப்பட்டு உள்ளது. செல்வராஜ் தலைமறைவாகி விட்டார்.இதில் பங்குதாரர் போல் செயல்பட்ட சிவநேசன், தான் பணம் வாங்கவில்லை என்கிறார்.
இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கலெக்டர் உத்தரவுப்படி, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE