பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சரின் மனைவிக்காக கோவில் திறக்கப்பட்டதா?

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

தஞ்சாவூர் : கும்பகோணம் அடுத்த, பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலுக்கு, வேளாண் துறை அமைச்சர், துரைகண்ணுவின் மனைவி சென்று சிறப்பு பூஜைகள் செய்ததாக, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவரே, கலெக்டர், அறநிலையத் துறையினருக்கு புகார் அனுப்பி உள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக, தமிழகம் முழுதும் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில், பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னிதியில், கடந்த, ௧௭ மாலை, ௬:௩௦ மணிக்கு, வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணுவின் மனைவி பானுமதி, சுவாமி தரிசனம் செய்ததாக, புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க., பிரமுகர் சின்னப்பா என்பவர், தஞ்சை கலெக்டர், அறநிலையத் துறையினருக்கு அனுப்பிய புகார்:ஆடி மாதம் முதல் வெள்ளி அன்று, அமைச்சர் துரைகண்ணு மனைவி பானுமதி, 15க்கும் மேற்பட்ட பெண்களுடன் கோவிலுக்கு வந்தார்.

அவர்களை, நிர்வாக அலுவலர் முத்துராமன், சன்னிதி உள்ளே அழைத்து சென்று உள்ளார். அவர்களுக்காக, கோவிலுக்குள், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும், கோவில் வளாகம் மற்றும் வணிகர் சங்கத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவாகியுள்ளன. அவற்றை ஆய்வு செய்து, அரசின் உத்தரவை மீறி செயல்பட்ட, நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.நிர்வாக அலுவலர் முத்துராமன் கூறுகையில், ''அமைச்சரின் மனைவி பானுமதி, அடிக்கடி சாமி கும்பிட கோவிலுக்கு வருவது வழக்கம். அதே போல், இம்முறையும் வந்து, வாசலில் நின்றபடி சாமி கும்பிட்டு சென்று விட்டார்.''அவருக்காக விதியை மீறவில்லை. அவர் கோவிலுக்கு உள்ளே வந்ததாக கூறுவது, தவறான தகவல்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X