பொது செய்தி

தமிழ்நாடு

பூக்களால் கண்ணைக் கவரும் கிராமச் சாலை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 பூக்களால் கண்ணைக் கவரும் கிராமச் சாலை

திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியம் வேலங்குடியிலிருந்து கொன்னத்தான்பட்டி வழியாக பூலாங்குறிச்சிசெல்லும் சாலையின் இருபுறமும் வேலிகளில் குத்துச் செடி மற்றும் கொடிகளில் பூத்திருக்கும் பல வண்ண மலர்கள் மனதைக் கவர்கின்றன.

நகர் புறங்களில் மணம் வீசாத குரோட்டன்ஸ் செடிகளையும், பூக்களையும் தான் பார்க்க முடிகிறது.இதற்கு மாறாக வேலங்குடியிலிருந்து கொன்னத்தான்பட்டி வழியாகபூலாங்குறிச்சி செல்லும் ரோட்டின் இருபுறமும் பசுமையாக அடர்த்தியான உயிர் வேலி பல கி.மீ.,துாரம் காணப்படுகிறது.மயில்கள் அகவுவதுமுதல் பல பறவைகளின் கீச்சிடும் சப்தமும் கேட்க முடிகிறது.

அந்த வேலியில் பல பாரம்பரிய தாவரங்களிலிருந்து வெள்ளை,மஞ்சள்,வைலட்,சிவப்பு,ஊதா என்று பல வண்ணங்களில்பூக்களையும், ஏன் பல வண்ணஇலைகளையும் பார்க்க முடிந்தது. இந்த உயிர்வேலியில் கோவை, பிரண்டை, கண்வலி கிழங்கு, ஆவாரம்பூ, கள்ளிப்பூக்கள், குறிஞ்சாக்கீரை, துாதுவளை, துளசி.. என்று மருத்துவதாவரங்களையும், மரங்களான நாடுகருவை, பூவரசு, உசிலை, வேலா, வேப்பமரம்.. உள்ளிட்ட பலபெயர் தெரியாத செடி, கொடி, மரங்களும் காணப்படுகின்றன.

வேளாண் நிபுணர்கள் கூறுகையில், 'இந்த உயிர்வேலியில் தாவரங்கள் மட்டுமின்றி பல உயிரினங்களும் வாழக்கூடியது. இயற்கையான உணவு சங்கிலி அறுபடாமல் இருக்கும்.இயற்கை உரமும் உற்பத்தியாகும். சுற்றுச்சூழல் மேம்படும். மண் அரிப்பு இருக்காது. 'என்கின்றனர். இப்பகுதியில் பெயருக்கு கூட சீமைக்கருவை காணப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X