சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிச்சயித்த பெண் பலி கொரோனா காரணம்?

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

திருப்பத்துார் : திருமணம் நிச்சயமான இளம்பெண் திடீரென இறந்ததால், அவரது உறவினர்கள், 9௦ பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத்தை சேர்ந்தவர் ஆயிஷா, 19. இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம், திடீரென மயங்கி விழுந்தார்.காதர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர்.'அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என, வருவாய்த் துறையினர் கூறினர்; அதற்கு, குடும்பத்தினர் மறுத்தனர்.


இதனால், இறுதி சடங்கிற்கு பின், உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டது.ஆயிஷா உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள், 60 பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X