பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி; நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.,யாகும். அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நேற்று நீர்மட்டம், 69.32 அடி; நீர் இருப்பு, 32.12 டி.எம்.சி.,யாக இருந்தது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவின், கபினி அணை நீர்வரத்து வினாடிக்கு, 7,046 கன அடியாகவும், கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, 14 ஆயிரத்து, 620 கன அடியாகவும் அதிகரித்தது.நேற்று மேட்டூர் அணைக்கு, வினாடிக்கு, 3,600 கன அடி நீர் வந்தது. கர்நாடகா அணைகளில், நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X