சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்களிடையே விழிப்புணர்வு இல்லை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 மக்களிடையே விழிப்புணர்வு இல்லை

சிவகங்கை:கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் மக்களிடையே போதியவிழிப்புணர்வு இல்லை.சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனாஅதிகளவில் பரவி வருகிறது.

மக்கள் பொது இடங்களில் கூடும் போது முறையாக பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது இல்லை. மார்க்கெட் பகுதி, ரேஷன் கடைகள்,டீக்கடைகள், அலுவலகங்களுக்கு வரும் மக்கள் முக கவசம் அணிந்து வந்தாலும்,சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை.

இதன் காரணமாக மக்கள் கூடும்இடங்களில் எளிதாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தினசரி நுாற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இறப்பு வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி சமூக பரவலாக மாறி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X