பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு அர்ச்சகர் பலி திருப்பதியில் 15 நாள் ஊரடங்கு

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்த, முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

திருப்பதியில், இன்று முதல், ஆக., 6 வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில், மடப்பள்ளி ஊழியர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள், ஜீயர்கள் என, ௧௦௦க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. முதல் உயிரிழப்பு அவர்கள், திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலர் குணமடைந்து வீடு திரும்பினர். திருமலை ஏழுமலையான் கோவிலில், முன்னாள் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்த சீனிவாசமூர்த்தி தீட்சிதர், 75, என்பவருக்கு, கடந்த, 8ல், கொரோனா தொற்று ஏற்பட்டது.

அவர் திருப்பதியில் உள்ள, 'கோவிட்' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார்.இதுவே, தேவஸ்தானத்தில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு. அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏழுமலையான் சேவையில் இருந்தார்.தலைமை அர்ச்சகர் பதவியில் இருந்ததால், அவருக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதை செய்ய வேண்டியது மரபு. ஆனால், கொரோனா தொற்றால் அவரது உடலை தொடக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பொது முடக்கம்சித்துார் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா கூறியதாவது:திருப்பதியில் கொரோனா, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்துார் மாவட்டத்தில் மரண எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இதை கட்டுப்படுத்த, திருப்பதியில் இன்று முதல் ஆக., ௫ வரை, முழு பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது.காலை, 6;௦௦ முதல், பகல், 11:௦௦ மணி வரை மட்டுமே கடைகள், உணவகங்கள், மதுக் கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்கும். அதன் பின் பால், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும்.திருப்பதி நகரவாசிகளும், 11:௦௦ மணிக்கு பின் வெளியில் நடமாட அனுமதியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தரிசனம் ரத்து?இந்நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழு, முன்னாள் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அதில், 'திருமலையில் பக்தர்களின் தரிசன அனுமதியை, தற்காலிகமாக ரத்து செய்து, அனைத்து சேவைகளையும் ஏகாந்தமாக நடத்தினால், அர்ச்சகர்களின் உடல்நலன் காக்கப்படும்.'இல்லை என்றால், திருமலையின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும். எனவே, ஆந்திர அரசு, ஏழுமலையான் தரிசன அனுமதியை ரத்து செய்ய வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
21-ஜூலை-202016:36:31 IST Report Abuse
skv srinivasankrishnaveni மக்கள் நன்னாவே ஒத்துழைக்கவேண்டும் பெருமாள் எங்கேயும் போகப்போரது இல்லீங்க நிச்சயம் பக்தர்களை கைவிடவும் மாட்டாரு அப்படியிருக்கும் பொது ஜனம் சித்த ஒத்துழைக்க படாதோ என்ன குறை வரபோறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X