பொது செய்தி

தமிழ்நாடு

19 கைதிகளுக்கு தொற்று கடலுார் சிறையில் பீதி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மத்திய சிறையில், 19 கைதிகளுக்கு, ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானதால், சக கைதிகள் கலக்கத்தில் உள்ளனர்.

கடலுார் கேப்பர் மலையில், மத்திய சிறை உள்ளது. இங்கு, 600க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். ஏற்கனவே, இங்கு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணமடைந்தனர்.கடலுார் மாவட்டத்தில் உள்ள கிளைச் சிறை மற்றும் விழுப்புரம், திருக்கோவிலுார் கிளைச் சிறைகளில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன், 58 விசாரணை கைதிகள், கடலுார் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 19 பேருக்கு தொற்று உறுதியானது. அனைவரும், கடலுார் தேவனாம்பட்டினத்தில் உள்ள கல்லுாரி விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில், உடல் நலம் பாதித்த நிலையில் இருந்த, நான்கு கைதிகள், கடலுார் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். சிறை முழுதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. கைதிகளுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவது, சக கைதிகள் மத்தியில், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X