பொது செய்தி

தமிழ்நாடு

தாளையடிக்கோட்டை கண்மாயில் குடிமராமத்துபணி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 தாளையடிக்கோட்டை கண்மாயில் குடிமராமத்துபணி

தாளையடிக்கோட்டை கண்மாயில் குடிமராமத்துபணி மேற்கொள்ள ரூ.85.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தாளையடிக்கோட்டை குரூப்பைச் சேர்ந்த மேமங்களம் நடராஜன்,தாளையடிக்கோட்டை காரு தலைமையிலான பாசன சங்கத்தினர் பணி மேற்கொள்ள பொதுப் பணித்துறையில் பதிவு செய்தனர்.இதில் நடராஜன் தரப்புக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, காரு தரப்பினர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஜூலை 17ல் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன் தலைமையில், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சமாதானம் ஏற்பட வில்லை.நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று பாசன தாரர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பரமக்குடி உதவி தாசில்தார் மேகலா தலைமையில்நடந்த ஓட்டெடுப்பில் 109 பேர் வாக்களித்தனர். இதில் நடராஜன் 57, காரு 44 வாக்குகள் பெற்றதுடன், 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி பாசனதார்கள் மத்தியில் நடந்த ஓட்டெடுப்பில் நடராஜன் வெற்றி பெற்றதால் அவர் தரப்பினர் பணி மேற்கொள்வர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X