புதிய கருத்துக் கணிப்பில் டிரம்பை முந்தும் பிடன்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
2020 US elections, trump, donald trump, joe biden


வாஷிங்டன் : வரும், நவ.,ல் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான புதிய கருத்துக் கணிப்பில், அதிபர், டொனால்டு டிரம்பை விட, அவரை எதிர்த்து போட்டியிட உள்ள, ஜோ பிடனுக்கான ஆதரவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர், டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார்.ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிட உள்ளார். 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையும், 'ஏ.பி.சி., நியூஸ்' நிறுவனமும் இணைந்து, சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போதைய சூழ்நிலையில், ஜோ பிடனுக்கு, 55 சதவீத மக்களும், டிரம்புக்கு, 40 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


latest tamil news



இருவருக்கும் இடையேயான வித்தியாசம், 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில், இந்த இடைவெளி, 2 சதவீதமாகவும், மே மாதத்தில், 10 சதவீதமாகவும் இருந்தது.கொரோனா பரவலைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகளே, அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்னையாக இருக்கும் என, தெரிகிறது.டிரம்புக்கு ஆதரவாக ஓட்டளித்தவர்களில், 72 சதவீதம் பேர் அவர் மீண்டும் வர வேண்டும் என்பதை கூறியுள்ளனர். அதே நேரத்தில், பிடனுக்கு ஓட்டளித்தவர்களில், 62 சதவீதம் பேர், டிரம்பை தோற்கடிக்க வேண்டும் என்பதை முக்கியமாக கருதுவதாக கூறியுள்ளனர்.ஓட்டளித்தவர்களில், 54 சதவீதம் பேர், கொரோனா விவகாரத்தை, பிடன் சிறப்பாக கையாண்டிருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில், 34 சதவீதம் பேர், டிரம்ப் சிறப்பாக செயல்பட்டதாக கூறியுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
21-ஜூலை-202010:06:26 IST Report Abuse
Ramaraj P சபை உறுப்பினர்களே பீடனுக்கு ஓட்டு போட வில்லை.டிரம்ப் 95 ஓட்டு.பீடன் 65 ஓட்டு.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-ஜூலை-202008:59:36 IST Report Abuse
Chandramoulli தென் சீன கடல் போர் கடைசி நேரத்தில் கைகொடுக்கும். டிரம்ப் வெற்றி பெறுவார்.
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
21-ஜூலை-202008:26:09 IST Report Abuse
Madhav டிரம்பு காலத்தில் பொருளாதார வளர்ச்சியில்லை முன்னேற்றமில்லை வெறி மட்டுமே அதிகமாகியுள்ளது போன தேர்தலில் டிரம்பு ரசியா உடன் இரகசிய கூட்டு என்பது பல விதங்களில் விவாதிக்கப் பட்டது. இந்தியர் பெருமளவு பயன்பெறும் வீசாக்களை நிறுத்தியதால் அமெரிக்காவுக்கும் பயனில்லை, இந்தியாவுக்கும் தொல்லை. இந்தியர்கள் பார்க்கும் மென்பொருள் வேலைகளை அமெரிக்கர்கள் விரும்புவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X