பொது செய்தி

தமிழ்நாடு

இருக்கவே இருக்கு சித்தா, ஆயுர்வேதா! எதற்கு பயம்?

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தாலும், சித்தா, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறைகள் இருப்பதால், பாதிப்பு கணக்கை பற்றி, கவலைப்பட தேவையில்லை. தொற்று பாதித்தவர்களுக்கு, இந்த மருத்துவ முறைகளில், சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை, எல்லா மாவட்டங்களிலும் ஏற்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு அதிகமாக இருந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும்
சித்தா, ஆயுர்வேதா, கொரோனா, சிகிச்சை

சென்னை: தமிழகத்தில், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தாலும், சித்தா, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறைகள் இருப்பதால், பாதிப்பு கணக்கை பற்றி, கவலைப்பட தேவையில்லை. தொற்று பாதித்தவர்களுக்கு, இந்த மருத்துவ முறைகளில், சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை, எல்லா மாவட்டங்களிலும் ஏற்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு அதிகமாக இருந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், பீதியை விலக்கி, ஆரோக்கியமாக சிந்திக்க மக்கள் முன்வர வேண்டும்.

சென்னையில், மார்ச்சில் துவங்கிய கொரோனா பாதிப்பு, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த மூன்று மாதங்களில், மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அலோபதி சிகிச்சையில், நோயாளிகள் குணமடைவதற்கு ஏற்பட்ட காலதாமதம் போன்ற காரணங்களால், சித்தா சிகிச்சைக்கும், தமிழக அரசு அனுமதி அளித்தது.

சித்தாவில் உள்ள, கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், மூலிகை கஷாயம் மற்றும் உணவு வகைகள், கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைய, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்தன. எனவே, சென்னை, சாலிகிராமம், ஜவஹர் பொறியியல் கல்லுாரியை, சித்தா நிபுணர் டாக்டர் வீரபாபு குழுவினருக்கு, தனித்த சித்தா சிகிச்சைக்காக அரசு ஒதுக்கியது. அங்கு, ஆக்சிஜன் அளவு, 82 ஆக குறைந்த நோயாளிகள் உட்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அதேபோல, வியாசர்பாடி, அம்பேத்கர் கலை கல்லுாரியிலும், தனித்த சித்தா சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு இயற்கையாகவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில், யோகாவில் உள்ள, 12 வகையான பயிற்சிகளும் தரப்படுகின்றன. குறிப்பாக, பிராமரி பிராணயாமம், நாடிசுத்தி பிராணயாமம் உள்ளிட்ட யோகா பயிற்சிகள், மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமங்களுக்கு, நல்ல தீர்வை அளித்து வருகின்றன. அதேபோல, ஓமியோபதி மருத்துவ முறையில் உள்ள, ஆர்சனிக் ஆல்பம் மருந்து, கொரோனா செல்களுக்கு எதிராக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், அலோபதி மருத்துவ சிகிச்சையுடன், சித்தா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் தரப்படும் சிகிச்சை, சென்னையில், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் உதவியது. தற்போது, சென்னையில் தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, தேனி, விருதுநகர், திருவண்ணாமலை உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.இந்த மாவட்டங்களிலும், அலோபதியுடன், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே, ஆயுர்வேத முறையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, அரசு முன்வந்துள்ளது. அதன்படி, ''ஆயுர்வேத முறையில், சிகிச்சை அளிக்க முறைப்படி கோருபவர்களுக்கு, விரைந்து அனுமதி வழங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத சிகிச்சையில், தசமூலம் கடுகத்தராய கஷாயம், அகத்தியர் ரசாயன லேகியம், வியகராத கஷாயம், ஆயுஷ் கஷாம் ஆகியவை, கொரோனா பாதிப்புகளான, காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என, ஆயுர்வேத டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


சித்த மருத்துவ உணவுகள்:

இதற்கிடையில், மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி, உணவு முறைகள் வழியாகவும், நோய் பாதிப்பை குணப்படுத்தலாம் என, ஆலோசனை சொல்லப்பட்டு உள்ளது. சித்த மருத்துவ முறையிலான உணவுகளை, தினமும் மூன்று வேளையும் உட்கொண்டால், கொரோனா பாதிப்புகளில் இருந்து, தற்காத்து கொள்ளலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


காலை உணவு

* காலை, 6:30 மணி: துளசி, சுக்கு, இலவங்கப்பட்டை, மிளகு, எலுமிச்சை பழச்சாறு, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, மூலிகை தேநீர் தயாரித்து பருகலாம்

* காலை, 8:20: சுண்டல், பழ துண்டுகள், தினை பொங்கல், கேழ்வரகு அல்லது அரிசி புட்டு, தோசை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம். இட்லி, தோசை தயாரிக்க, மாப்பிள்ளை சம்பா அரிசி சிறந்தது. இதற்கு, கொத்தமல்லி, புதினா சட்னி, இஞ்சி சட்னி, தேங்காய், நிலக்கடலை சட்னியில் ஒன்றை எடுத்து கொள்ளலாம்

* காலை, 10:00: நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, புதினா சாறுடன் தேன், வெந்நீர் கலந்து பருகலாம்


மதிய உணவு:

* மதியம், 12:30: உளுந்து சாதம், நெல்லிக்காய் சாதம், எள்ளு சாதம், புதினா சாதம், கறிவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம், பருப்பு சாதம் என, ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம். மேலும், மிளகு ரசம், துாதுவளை ரசம், எலுமிச்சை, இஞ்சி ரசம் குடிக்கலாம்.

முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கன்னி கீரை, அரைக்கீரை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும், அவரைக்காய், கோவைக்காய், வாழைப்பூ, கேரட், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து கொள்ளலாம். பின், ஐங்காயப்பொடி கலந்த மோர், சீரக தண்ணீர் பருகலாம்


இரவு உணவு

* மாலை, 5:00: மூலிகை தேநீர் மீண்டும் பருகலாம்

* இரவு: 7:30: கோதுமை ரவா உப்புமா, கோதுமை கிச்சடி, மாப்பிளை சம்பா அரிசி இட்லி, துாதுவளை தோசை ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்

* இரவு, 9:00 மணி: மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு பானத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகலாம்.

பாரம்பரிய உணவு வகைகளும், பாரம்பரிய மருத்துவ முறைகளான, சித்தா, ஆயுர்வேதா சிகிச்சைகளும் இருக்கையில், தொற்று பரவலை பற்றி, மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, நேற்று கூட அதிகம் தான். ஆனாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும், அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, பாதிப்பு ஏற்பட்டால் பயப்படாமல், இந்த சிகிச்சைகளை பெற முன்வர வேண்டும். உயிரிழப்பு இன்றி, இந்த சிகிச்சை பெற்ற அனைவரும், நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். எனவே, பீதியை விலக்கி, ஆரோக்கியமான சிந்தனைக்கு அனைவரும் மாற வேண்டியது அவசியம்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
21-ஜூலை-202018:58:10 IST Report Abuse
Tamilnesan சித்த , ஆயுர்வேத, இரண்டிலும் நூறு சதவிகிதம் பக்க விளைவுகள் கிடையாது.
Rate this:
Cancel
Modikumar - West Mambalam,இந்தியா
21-ஜூலை-202014:57:54 IST Report Abuse
Modikumar செய்தியின் Healthy food மெனுவை படிக்கும் போதே நம் மனதில் ஆரோக்கிய மனநிலை ஏற்படுகிறது. கொரோனாவால் நல்ல விஷயங்கள் ஏற்பட்டுள்ளது. வாட்ஸாப், facebook ளும் துளசி, சுக்கு, இலவங்கப்பட்டை, மிளகு, எலுமிச்சை பழச்சாறு, நாட்டு சர்க்கரை சாப்பிடுங்கள், உளுந்து சாதம், நெல்லிக்காய் சாதம், எள்ளு சாதம், புதினா சாதம், கறிவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம், பருப்பு சாதம் சாப்பிடுங்கள் என ஆரோக்கிய செய்திகள் வருவது நல்ல விஷயம். யாருமே, ஹார்லிக்ஸ் சாப்பிடு, பூஸ்ட் சாப்பிடு, காம்பிளான் சாப்பிடு, மாகி சாப்பிடு, பர்கர், பீச சாப்பிடு, என எந்த அறிவுரையும் யாரும் கூறுவதில்லை. இதிலிருந்து கொரோனா சமூகத்திற்கு பல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது, நன்றி கொரோனா
Rate this:
Cancel
21-ஜூலை-202013:15:10 IST Report Abuse
ஆரூர் ரங் அறிவியல்படி நிரூபிக்க முடியாத எந்த மருந்தையோ மருத்துவ முறையையோ (வாக்கு வங்கி அரசியலுக்காக) அரசு அங்கீகரித்தல் ஆபத்து. மாற்று மருத்துவ மருந்துகளிலும் பக்க விளைவு எவ்வளவோ உண்டு. நவீன மருத்துவமே உலகெங்கும் பரவிக்கிடந்த பல்வேறு பாரம்பரிய மருந்துகளை ஆய்வு செய்து மேம்படுத்தி தனதாக்கிய பரந்த மனதுடைய ஒன்று. பக்கவிளைவுகளை மறைத்து நாடகமாடுவதில்லை. இன்றும் நமது நாட்டில் 90 விழுக்காட்டுக்க்குமேல நவீன அறிவியல்பூர்வ மருந்துகளை உள்நாட்டு நிறுவனங்கள்தான் தயாரிக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை தாவர மருந்துகளையும் உற்பத்தி செய்கின்றன. நவீன அறிவியலின்மீது அவதூறு பரப்புவது தகாது. அவையில்லாவிட்டால் வைசூரி அம்மை , போலியோ காலரா போன்ற கொள்ளை நோய்களால் நாடே அழிந்திருக்கும். அவற்றுக்கு நாட்டு மருந்துகள் இல்லை. போதுமான அரசு மருத்துவக் கட்டமைப்பை உருவாக்காதது மருந்து நிறுவனங்களின் தவறல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X