சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்:ராமநாதபுரம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு

ராமநாதபுரம்: போலீஸ் ஸ்டேஷனில் டூவீலரை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் வாகன தணிக்கையில்பறிமுதல் செய்த டூவீலரை ராமநாதபுரம் பி1 போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி இருந்தனர். இதனை ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த பிரகாஷ் 27, போலீசாருக்கு தெரியாமல் திருடிச் சென்றார். நேற்று காலை ராமநாதபுரத்தில் அவரை கைது செய்தனர்.

போக்சோவில் வாலிபர் கைது

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள வரவணியை சேர்ந்த 15 வயது சிறுமி. 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். விடுமுறையில் வீட்டில் இருந்த அவரை அதே ஊரைச் சேர்ந்த வாசு 22, என்பவர் மிரட்டி முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துஉள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வாசுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடையை உடைத்து திருட்டு

பரமக்குடி: பரமக்குடி நெடுஞ்சாலையோரம் மெடிக்கல்நடத்தி வருபவர் பூமிநாதன். இவர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை பார்த்த போதுபூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்தரூ.12 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. சத்திரக்குடியில் குரு எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். அவரது கடையும் உடைக்கப்பட்டு ரூ. 15 ஆயிரம் திருடுபோயுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையை சேர்ந்தவர் கனகராஜ் 62. தெற்கு காட்டூர் பகுதியில் உள்ள இவரது தென்னந்தோப்பில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கேட் திருடப்பட்டது.கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் 2 கார், ஆட்டோ உள்ளிட்ட கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலவலசையை சேர்ந்த விக்னேஷ் 27, காஞ்சிரங்குடி ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த போது, அதே ஊரை சேர்ந்தஇமாம் ஜான் என்பவரும் குளித்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். விக்னேஷ் புகாரில் இமாம் ஜான், முகம்மது அலி, அப்ரிதி உள்ளிட்ட 5 பேர் மீதும், இம்ரான் ஜான் புகாரில் பேரில் விக்னேஷ், செல்லத்துரை, திருச்செல்வம், செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீதும் கீழக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.

பெண் தற்கொலைகடலாடி: கடலாடி அருகே ஆப்பனுாரை சேர்ந்தவர்ராமர். இவரது மனைவி பிரதீபா 35. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதீபா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X