அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., அறக்கட்டளை சொத்து விவகாரம்: பா.ஜ., புது திட்டம்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
Congress, BJP, Murugan, KS Alagiri, காங்கிரஸ், சொத்து, அபரிப்பு, பாஜ

தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய், டில்லி மேலிடத்திற்கு கைமாறியுள்ளதா என்பது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வழக்கு தொடுக்கவும், போராட்டம் நடத்தவும், தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர், காமராஜரால் வாங்கப்பட்ட, சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம், 149 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ளது. இதில், காமராஜர் அரங்கம் மற்றும் காமராஜர் பவனில் உள்ள கடைகள் என, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. காங்கிரஸ் அறக்கட்டளை கணக்கில், கோடிக்கணக்கில் பணமும் உள்ளது. இந்த பணத்திற்கு கிடைக்கும் வட்டித் தொகையில், ஏழை குழந்தைகளுக்கு கல்வி கட்டணம், மருத்துவ செலவு போன்ற, பல்வேறு சமுதாய நலப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையை, டில்லி மேலிடம், தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதையடுத்து, காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் நிதியுதவிக்கு, டில்லி மேலிடத்தின் அனுமதி கட்டாயமானது. எந்த பணம் பரிவர்த்தனையும் நடத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில், அறக்கட்டளையின் சொத்து விவகாரத்தில், முறைகேடு நடந்துள்ளது என்ற புகார், பா.ஜ., தரப்பில் எழுப்பப்பட்டு உள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன், 'காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில், தனியார் கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என, குற்றம் சாட்டினார். இதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மறுப்புத் தெரிவித்தார். 'கட்டடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடவில்லை' என, கூறினார்.

இந்நிலையில், 'டுவிட்டர்' பக்கத்தில், முருகன் நேற்று கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துக்களை மேம்படுத்துவதற்கு, 1996 மே, 28ல், 'ஸ்கை ஹை பில்டரஸ் மற்றும் ஹீரால் கன்ஸ்ட்ரக்சன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உண்மையா; இல்லையா? இது அறக்கட்டளை சட்டத்திற்கு எதிரானதா; இல்லையா? இவ்வாறு, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துக்களை, டில்லி மேலிடம், தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு தான், டில்லி நிர்வாகி மோதிலால் வோரா நியமிக்கப்பட்டார். அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில், ஓட்டல், விடுதி, வணிக வளாகம் என, எந்த கட்டடமும் கட்டுவதற்கு, டில்லி மேலிடத்திற்கு உரிமை இருக்கிறது. இதில், தமிழக காங்கிரசாரால் தலையிட முடியாது. அதேசமயம், அறக்கட்டளைக்கு சொந்தமாக, கோடிக்கணக்கில் பணம் உள்ளது.

இந்த பணத்தை, டில்லி மேலிடம் பயன்படுத்தினால், அது தவறு. எனவே தான், டில்லி மேலிடத்திற்கு பணம் கைமாறியுள்ளதா என்பதை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, சட்டரீதியான ஆவணங்களை, தமிழக பா.ஜ., திரட்டி வருகிறது. மேலும், பொது மக்களிடம், இந்த முறைகேட்டை எடுத்து செல்லும் வகையில், தமிழக பா.ஜ., தரப்பில் போராட்டம் நடத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
22-ஜூலை-202012:06:37 IST Report Abuse
konanki இந்திய குடிமகன்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்து வேலைக்காக அயல் நாட்டில் வசிக்கும் மாற்று மதத்தினர் அங்கிருந்து் பொது வெளியில் ஹிந்துமதத்தினரை ஜாதி அடையாளம் காட்டி திட்ட இந்திய அரசியல் நிர்ணய சட்டம் அனுமதிக்கிறதா? பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட பாதுகாப்பு என்ன ? வாசகர்களே சற்று விளக்குங்கள்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
22-ஜூலை-202011:26:36 IST Report Abuse
konanki It is the SOP in DK and its supporters that if water is flowing in Toilet then it is the achievement of EVR. If water is not flowing in the Toilet it is due to double born . We have heard this enough. Tell this to ur brothers in ur Kingdom
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
22-ஜூலை-202011:07:56 IST Report Abuse
konanki Then u please asif that he should first release videos abt the atrocities happening in self group before defaming others' beliefs.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X