பொது செய்தி

தமிழ்நாடு

ருசிக்க தூண்டும் கோதுமை அல்வா டூவீலர் மூலம் நடக்குது விற்பனை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 ருசிக்க தூண்டும் கோதுமை அல்வா டூவீலர் மூலம் நடக்குது விற்பனை

விருதுநகர்:'திருநெல்வேலி அல்வா டா...' என்ற பாடலை கேட்காதவரும் அல்வாவை ருசிக்காதவரும் இல்லை எனலாம். அந்தளவுக்கு பட்டிதொட்டியெங்கும் பரவி கிடக்கிறது அல்வாவின் மகிமை.

டால்டா ஒட்டிக்கொண்டாலும் மீண்டும் மீண்டும் உண்ண ஆசை கூடும். இதிலும் மைதா அல்வாவை காட்டிலும் கோதுமை அல்வா தனி ருசி. ஆனால் இதை ஒரு சில இடங்களில் மட்டுமே தரமாக தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் சென்னல்குடியை சேர்ந்த ராமலிங்கமூர்த்தி கோதுமையில் அல்வா தயாரித்து குறைந்த விலையில் டூவீலர் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

கோட்டூர் குருசாமி கோயில் முன்பு விற்று வந்த நிலையில் ஊரடங்கால் விருதுநகர் பஜார் தெப்பம் பகுதியில் விற்கிறார். இதன் ஸ்பெஷலே அன்றன்று தயாரித்து அன்றே விற்பதே. எப்போது சென்றாலும் சூடான அல்வா கிடைக்கும். டால்டா பயன்படுத்துவதில்லை. நெய், சன்பிளவர் ஆயில் பயன்படுத்துவதால் முதியவர்களும் அஞ்சாமல் ருசிக்கின்றனர்.

1 கிலோ ரூ.160க்கு விற்கிறார். சொந்த தயாரிப்பு என்பதால் சம்பளம் மட்டும் வந்தால் போதும் லாபம் பெரிய அளவில் வேண்டாம் என விற்பனை செய்கிறார். சுய தொழில் முனைவோர் பலர் ஊரடங்கு வேளையில் முடங்கி கிடக்கும் நிலையில் ராமலிங்கமூர்த்தி நல்ல உதாரணமாக செயல்படுகிறார்.

சத்தான அல்வாஏலக்காய், ஜாதிக்காய், கருப்பட்டி சேர்த்து தயாரிக்கும் இதை லாபம் எதிர்பார்த்து தயாரிக்கவில்லை. தெருக்களிலும் சென்று விற்பனை செய்கிறேன். மைதா அல்வாவை காட்டிலும் கோதுமை அல்வா சத்தானது.

ராமலிங்கமூர்த்தி, அல்வா தயாரிப்பவர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X