ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கிறது டூவீலர்கள்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 ஆக்கிரமிப்பால் ரோட்டில் நிற்கிறது டூவீலர்கள்

சிவகாசி:சிவகாசியில் பல்வேறு முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்பால் ரோட்டின் ஓரத்திலேயே டூ வீலர்கள், கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகனங்கள் செல்ல சிரமப்படுவதோடு விபத்தும் ஏற்பட வழி வகுக்கிறது.

இங்கு வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டின் அருகில்தான் உள்ளது. நகரின் உள்பகுதி அனைத்து ரோடுகளுமே மிகவும் குறுகலாக உள்ளன. ரோட்டின் இருபுறமும் நகை, ஓட்டல், ஜவுளி என பல்வேறு கடைகள் உள்ளன.

ஒரு நிறுவனமோ, கடையோ எதுவாக இருந்தாலும் அதை அமைக்கும் இடத்தில் வாடிக்கையாளர்களின் டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு இட வசதி ஏற்படுத்த வேண்டும். ஆனால் சிவகாசியில் ஒரு சில பெரிய நிறுவனங்கள், கடைகளைத் தவிர மற்றவைகளில் இடம் ஒதுக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வாகனங்களை ரோட்டின் அருகிலும், ரோட்டின் மேலேயும் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

சிவகாசி தொழில் நகரம் என்பதால் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதுதவிர சுற்று கிராம மக்களும் இங்குதான் பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர். ரோட்டோரங்களை பெரும்பாலான கடைகள் ஆக்கிமிப்பு வேற செய்துள்ளன. இதனால் டூ வீலர்களை முறையாக நிறுத்த வழியில்லை. ரோட்டின் மீது நிறுத்தப்படும் வாகனங்களால் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றன. நடந்து, சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X