பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' இல்லையா; ஆறு மாதம் சிறை

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
மாஸ்க், கொரோனா, சிறை, அபராதம், நீலகிரி, ஊட்டி

ஊட்டி : 'நீலகிரி மாவட்டத்தில், முக கவசம் இல்லாமல், வெளியில் சுற்றுபவர்களுக்கு, ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை: மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளை விதிமீறி நடத்தியதால் இரு வாரங்களில் 500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் தனி நபர் இடைவெளியை பின்பற்றாமல் இருந்தாலும் தனிமைப்படுத்தியவர்கள் வெளியில் சுற்றினாலும் ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும். எச்சில் துப்பினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அனுமதியில்லாமல் திருமணம் உட்பட தனி நபர் நிகழ்ச்சிகளை நடத்தினால் ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202019:15:33 IST Report Abuse
ஆப்பு அத்தனை பேரையும் சிறையில் வைத்தால் அங்கே கொரோனா பரவாதா? பேசாம ஸ்பாட்டில் நாலு பிரம்படி குடுத்து அனுப்புங்க.
Rate this:
Cancel
RVK - Chennai,இந்தியா
21-ஜூலை-202010:36:00 IST Report Abuse
RVK இது போல் சம்மந்தம் இல்லாமல் தண்டனை இருப்பது கேலிக்குள்ளாகிறது. ஒரு 100 பேரை 6 மாதம் உள்ளே வைத்து சாப்பாடு போடமுடியுமா ? . இது போல் சிறிய செயலுக்கு சுகாதார பணியாளருடன் இணைந்து ஒருநாள் முதல் 15 நாள் வரை வேலை செய்ய வேண்டும் / என்று சட்டம் இருக்க வேண்டும். இப்போதைய சட்டத்தின் படி சிறை தண்டனை மற்றும் அபராதம் மட்டும் விதிக்க முடியும். ஆனால் சட்டம் வராது. ஏனென்றால் இன்னும் ஆட்சியளர்களிடம் பிரிட்டிஷ் மனோ பாவம் போகவில்லை.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202008:30:53 IST Report Abuse
Mani . V இது பொது மக்களுக்கு மட்டுமே. அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இது பொருந்தாது (condition apply). ஆனாலும் இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X