பொது செய்தி

தமிழ்நாடு

பரிசோதனை செய்தோரை கட்டாய தனிமைக்கு பரிந்துரை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

தேவாரம்:கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த சளி, உமிழ்நீர் பரிசோதனை மேற்கொண்டவர்களை 7 நாட்கள் வீட்டில் கட்டாய தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

+
--------------------------------------------------தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500. உயிரிழந்தவர்கள் 48 பேர். இதில் முதற்கட்ட பாதிப்பில் இருக்கும் போது கொரோனா பரிசோதனை செய்யாமல் திடீரென்று உயிரிழக்கும் முதியவர்கள் கணக்கில் வருவதில்லை. அவ்வாறு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியும் போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது. விபரம் தெரியாமல்இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் மூலம் எளிதில் தொற்று பரவுகிறது. இந்த காரணத்தால் தான் கிராமங்களில் திடீரென்று பாதிப்பு அதிகரித்துள்ளது.அரசு டாக்டர் கூறுகையில், 'தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி, எச்சில் பரிசோதனை செய்யப்படுகிறது. முடிவு வரும் முன் இவர்கள் சகஜமாக நடமாடுகின்றனர். யாருக்காவது தொற்று உறுதியானால் வேகமாக பரவுகிறது. இதை கட்டுப்படுத்த பரிசோதனை செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவர்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் இது நடைமுறைப்படுத்தப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X