தமிழ்நாடு

முயற்சிக்கலாமே கண்மாய்கரைகளில் பலன் தரும் மரங்கள்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
  முயற்சிக்கலாமே  கண்மாய்கரைகளில் பலன் தரும் மரங்கள்

சாத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் மழை பொழிவு குறைந்து வரும் நிலையில் கண்மாய் கரைகளில் பலன் தரும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் .இதற்கு பொதுப்பணித்துறையினரும் முன் வரவேண்டும்.

மாவட்டத்தில் பல கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. கரைகள் பலப் படுத்தப்பட்டு வருகிறது. கண்மாய் கரைகளில் பல ஆண்டுகளாக கரையை பலப்படுத்தும் வகையில் வளர்ந்திருந்த பனைமரம், புளியமரம், வேப்பமரம், ஆலமரம் போன்றவை வயது முதிர்வால் பட்டு விட்டன. சில பகுதிகளில் சமூகவிரோதிகள் வெட்டி கடத்தி விட்டனர்.

இதனால் கண்மாய் கரைகள் மரங்கள் இன்றி உள்ளன. லேசான மழை பெய்தாலும் கரை மண் கரைந்து விடுகிறது. இதை தடுக்க இங்கு புளிய மரம் ,வேப்ப மரம், ஆல மரம் ,பனை மரம் போன்றவற்றை நட்டு வளர்க்கலாம். இதன் மூலம் கரைகளும் வலுபடும். குளுமையான சூழலுடன் மழை பொழிவுக்கும் வழி வகுக்கும் என்பதால் கண்மாய் கரைகளில் பலன் தரும் மரங்களை நடவு செய்து பராமரிக்கு பொதுப்பணித்துறையினர் முன் வரவேண்டும்

இதற்கான ஆக்கபூர்வ பணிகளுக்கு வேளாண்துறையும் ஊக்கமளிக்க வேண்டும். இதன் மூலம் எதிர்கால சந்ததியினர் இயற்கை வளத்துடன் வாழ்வதோடு ஆடு,மாடு போன்ற கால்நடைகளும் இளைப்பாறும் .கண்மாய் தண்ணீர் ஆவியாவதும் குறையும். அழகும் கூடும் கண்மாய் கரையிலும் சீமைக்கருவேல முள்செடிகள் தான் வளர்ந்துள்ளன.

இவற்றை அகற்றி விட்டு பலன் தரும் மரங்களை வளர்ப்பதால் கண்மாய்கரைகளுக்கு அழகுகூடும் . பனை போன்ற மரங்கள் மனிதர்களுக்கும் பயன்தரும் . இதற்கு உள்ளாட்சி நிர்வாகமும் முயற்சிக்கலாம்.

பிரேம்குமார், அலைபேசி கடை உரிமையாளர், சாத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X