காரியாபட்டி: அன்பின் அடையாளம் மலர்களின் ராஜா என போற்றப்படும் ரோஜா கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. இது பல்வேறு வண்ணங்களில் பூக்கின்றன. பல இடங்களில் ரோஜா பயிரிட்டாலும் ஊட்டி ரோஜாவுக்கு தனி இடம் உண்டு. இதை விரும்பாத பெண்களே கிடையாது. இளைஞர்கள்கூட அதிகம் விரும்பும் மலராக உள்ளது.
கொரோனாவால் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் பெண்கள் பூ சூடுவதும் குறைந்து உள்ளது. கண்களைக் கவர்ந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஊட்டி ரோஜா வீட்டில் உள்ள பெண்களுக்காக வாங்க துாண்டும் அளவிற்கு ஆண்களை சுண்டி இழுக்கிறது.
காரியாபட்டியில் இதன் விற்பனை வெகுவாக உள்ளதால் அதிக விலை கொடுத்து வரவழைக்கிறார் பூ வியாபாரி முருகாயி. அவர் கூறியதாவது. பார்க்க அழகாக இருக்கும் ஊட்டி ரோஜாவை அதிகம் வாங்குவர்.
போக்குவரத்து முடக்கத்தால் ஊட்டி ரோஜா வரத்து குறைய லோடு வாகனங்களில் கொண்டு வரப்படும் இதை அதிக விலையாக இருந்தாலும் வாங்கி விற்பனை செய்கிறேன். லாபம் இல்லாவிட்டாலும் கண்களை கவரும் ஊட்டி ரோஜாவை வாங்கும்போது மற்ற பூக்களும் ஓரளவிற்கு விற்பனையாகிறது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE