தனியார் பள்ளி வாகனங்களுக்கு வரிகளை ரத்து செய்ய கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளி வாகனங்களுக்கு வரிகளை ரத்து செய்ய கோரிக்கை

Added : ஜூலை 21, 2020
Share
தேனி:கொரோனா பாதிப்பால் தனியார் பள்ளி வாகனங்களுக்கு சாலை, பசுமைவரிகளை ரத்து செய்ய வேண்டும் என தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.தனியார் பள்ளி வாகன உரிமையாளர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் காமராஜ், நிர்வாகிகள் மனுவில், கொரோனாவால் மார்ச் 14 முதல் பள்ளிகளும், வாகனங்களும் இயங்க வில்லை. கல்விக் கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம்

தேனி:கொரோனா பாதிப்பால் தனியார் பள்ளி வாகனங்களுக்கு சாலை, பசுமைவரிகளை ரத்து செய்ய வேண்டும் என தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.த

னியார் பள்ளி வாகன உரிமையாளர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் காமராஜ், நிர்வாகிகள் மனுவில், கொரோனாவால் மார்ச் 14 முதல் பள்ளிகளும், வாகனங்களும் இயங்க வில்லை. கல்விக் கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வாகன சாலைவரி, பசுமை வரி, இன்சூரன்ஸ், தர உறுதிச்சான்று கேட்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர், ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், கட்டட பராமரிப்பு, இதர செலவுகள் கூட செலுத்த முடியாத நிலையில் நிர்வாகிகள் உள்ளனர். இதனால் வரிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X