செய்திகள் சில வரிகளில் பகுதிக்காக... தேனி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில் பகுதிக்காக... தேனி

Added : ஜூலை 21, 2020
Share

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றிய பகுதியில் பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சில்வார்பட்டியில் கிளைப் பொறுப்பாளர்கள் ஆ.முருகன், அழகுராஜா, சி.முருகன் ஆகியோர் வீடு வீடாக சென்று கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பில் சிக்கல்

கம்பம்-: கம்பத்தில் கொரோனா தடுப்புக்கான முழு ஊரடங்கு அமலில் உள்ளது.ஆடி அமாவாசை என்பதால் பார்க் திடல், உழவர்சந்தை வீதி உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோர காய்கறி கடைகள் அமைத்தனர். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாங்கிச்சென்றனர். இதனால் நோய் தடுப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விவசாயி மீது தாக்குதல்

ஆண்டிபட்டி: அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் 41, விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த பசுக்களை நந்தகுமார், முத்துகுமார், முத்துச்சாமி, மணி ஆகியோர் அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதை கேட்க சென்ற இளங்கோவனை தாக்கியதில் காயமடைந்தார். நான்குபேர் மீதும் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விபத்தில் பலி

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் ரஞ்சித் 34. வடுகபட்டிக்கு டூவீலரில் சென்றார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்தார். காயமடைந்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரித்தனர்.

10 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியில் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், எஸ்.ஐ., ஜோதி சுப்பிரமணி மஞ்சளாறு பிரிவிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கை மீறியும் முககவசம் இன்றிடூ வீலரில் சுற்றித்திரிந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஏலக்காய் ஏலம் நிறுத்தம்

போடி: போடி நறுமணப்பொருள் வாரியம் அலுவலக 25 வயது ஆண் பணியாளருக்கு கொரோனா உறுதியானது. இந்த அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவி சீல் வைக்கப்பட்டது. இனிவரும் 14 நாட்களுக்கு இங்கு ஏலக்காய் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பயிர்கள் சேதம்

தேவதானப்பட்டி: மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தர்மலிங்கபுரம், தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர்களுக்கு விளை நிலங்கள் உள்ளன. மலைப்பகுதியில் வறட்சியால் உணவு, தண்ணீர் தேடிவரும் காட்டு மாடுகள் விளைநிலங்களில் புகுந்து தக்காளி, வாழை பயிர்களை சேதப்படுத்திச் செல்கின்றன. வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் திருட்டு

பெரியகுளம்: பெரியகுளம் வராகநதி அழகர்சாமிபுரம் பாலம், புதுப்பாலம், ஆடுபாலம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் சிலர் மாட்டுவண்டி, டிராக்டர்களில் மணல் திருடி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பாலம், பலம் இழந்து வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலசம் திருடியவர் கைது

போடி: போடி வலசத்துறை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்கண்ணன் 32. மற்றொரு நபருடன் சேர்ந்து இங்கு பரமசிவன் கோயில் கோபுரத்தில் இருந்த கலசத்தை திருடியுள்ளார். இவரை டவுன்போலீசார் கைது செய்தனர்.

முகக்கவசம் வழங்கல்

தேனி: வீரபாண்டி கலை அறிவியல் கல்லுாரி சார்பில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வீரபாண்டி ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் உள்ளிட்டவர்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் வழங்கினர். கொரோனா தடுப்பு குறித்து பிரசாரம் செய்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

.*தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக மனுவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் தெலுங்கு பேசும் மக்கள், சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவுபடுத்தி பேசுகின்றனர். அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கலெக்டர் அலுவலக வாயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

*கோவை, விருதுநகர், துாத்துக்குடியில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்புலி கட்சியினர் கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்களில் மனு அளித்து ஆர்பாட்டம் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X