சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் 129 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தேனி:தேனியில் டாக்டர்கள், துணைராணுவப்படைவீரர், தனியார் வங்கி மேலாளர், இன்ஸ்பெக்டர், போலீசார் உட்பட 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை25 வயது பெண் பயிற்சி டாக்டர், பழனிச்செட்டிபட்டி 36 வயது டாக்டர், கே.ஆர்.ஆர்., நகர் 69 வயது முதியவர், 29 வயது ஆண், பூதிப்புரம் 54 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

ஆண்டிபட்டி செட்டியார்பேட்டை மிட்டாய் கடை நடத்தும் 61, 52 வயது தம்பதி, தனியார் வங்கி 24 வயது மேலாளர், கொண்டமநாயக்கன்பட்டி 55 வயது காசாளர், சென்னையில் இருந்து திரும்பிய தனியார் நிறுவன 23 வயது ஊழியர், சொட்டு நீர் பாசன நிறுவனத்தின் 24 வயது மேலாளர் பாதிக்கப்பட்டனர்.

பெரியகுளம் வடகரை 44 வயது போலீஸ் இன்ஸ்பெக்டர், 41 வயது போலீஸ்காரர், தென்கரை போலீஸ் ஸ்டேஷன் 38 வயது போலீஸ்காரர், சருத்துப்பட்டி 48 வயது ஆண், போடி ஜே.கே.,பட்டி 13 வயது சிறுமி, ஒழுகல்பாதை 31 வயது ஆண், நறுமணப்பொருட்கள் வாரியத்தில் பணிபுரியும் 25 வயது கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பாதிக்கப்பட்டனர்.

உத்தமபாளையத்தில் கம்பம் 13 வயது சிறுமி, காஷ்மீரில் பணியில் இருந்து திரும்பிய 40 வயது துணை ராணுவப்படையான சி.ஆர்.பி.எப்., வீரர் உள்ளிட்ட மாவட்டத்தில் 129 பேர் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-ஜூலை-202008:42:27 IST Report Abuse
Mani . V இதென்னடா அதர்மயுத்தத்துக்கு வந்த சோதனை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X