பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கல ஒன்றிய கூட்டத்தில் விவாதம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
அருப்புக்கோட்டை:செலவு கணக்கு மட்டும்தான் காட்டுகிறீர்கள். வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என அருப்புக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதித்தனர்.இக்கூட்டம் தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமையில் , பி.டி.ஒ., க்கள் காமேஸ்வரி, சத்தியமூர்த்தி முன்னிலையில் நடந்தது. கவுன்சிலர்கள் விவாதம்: வாழவந்தராஜ் : நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைப்பதால் சுவாச கோளாறு

அருப்புக்கோட்டை:செலவு கணக்கு மட்டும்தான் காட்டுகிறீர்கள். வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை என அருப்புக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதித்தனர்.

இக்கூட்டம் தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமையில் , பி.டி.ஒ., க்கள் காமேஸ்வரி, சத்தியமூர்த்தி முன்னிலையில் நடந்தது.

கவுன்சிலர்கள் விவாதம்:

வாழவந்தராஜ் : நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைப்பதால் சுவாச கோளாறு ஏற்படுகிறது.

கோவிந்தசாமிநாதன் : பாலையம்பட்டி புற நகர் பகுதி தெருக்களில் பெயர் பலகை வைக்க வேண்டும்.

காமேஸ்வரி(பி.டி..ஒ.,): கொரோனா காலமாக இருப்பதால் நிதியை செவழிக்க முடியாது.

கோவிந்தசாமிநாதன் : கையுறை 346 வாங்க 36 ஆயிரத்து 745 செலவு எழுதுகிறீர்கள். செலவு கணக்கு தான் உள்ளது. வளர்ச்சி பணிகள் எதுவும் செய்ய வில்லை.

சீனிவாசன் : டெண்டர் விட்டு 6 மாதமாகியும் பணிகள் நடக்கவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.

கவுன்சிலர்கள் பதில் கணவர்கள் கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலையரசி , அழகுசக்தி , பாண்டிச்செல்வி பதில் அவரவர் கணவர்கள் கலந்து கொண்டு கேள்வி எழுப்பினர். இவர்களுக்கு பி.டி.ஒ., க்களும் பதில் கூறியது மற்றவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X