தேசிய வருவாய் தேர்வு182 மாணவர்கள் தேர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய வருவாய் தேர்வு182 மாணவர்கள் தேர்ச்சி

Added : ஜூலை 21, 2020
Share
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தேசிய வருவாய் தேர்வில் 182 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறினார்.அவர் கூறியது: ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய, தேசிய வருவாய் திறன் வழி தேர்வு (என்.எம்.எம்.எஸ்) நடத்தப்படுகிறது. அரசு, உதவி

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தேசிய வருவாய் தேர்வில் 182 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறினார்.
அவர் கூறியது: ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய, தேசிய வருவாய் திறன் வழி தேர்வு (என்.எம்.எம்.எஸ்) நடத்தப்படுகிறது.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இதனை எழுதலாம்.தேர்ச்சி மாணவர்களுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வழங்கப்படும். 2019 டிசம்பரில் நடந்த தேர்வில் திண்டுக்கல்லில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று வெளியான முடிவில், அரசு பள்ளி மாணவர்கள் 56 பேர் உட்பட 182 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X